தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வலம் வருபவர் நடிகர் மாதவன் இவர் தமிழ் சினிமா உலகில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பெண் ராசிகளை அதிகமாக தக்க வைத்துள்ளார். இவர் 2003 ஆம் ஆண்டு நடித்து வெளிவந்த ஜேஜே திரைப்படம் மிகப்பெரிய ஒரு வெற்றித் திரைப்படமாக அமைந்தது இத்திரைப்படம் வெளிவந்து மிகப்பெரிய வசூல் சாதனை பெற்றது.
இப்படத்தில் இவருடன் இணைந்து பூஜா உமாசங்கர், கலாபவன் மணி, டெல்லி கணேஷ், மாளவிகா அவினாஷ், தாமு, சார்லி போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர்.இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது பக்கம் திருப்பியவர் பிரியங்கா கோத்தாரி.இப்படத்தில் இவரது நடிப்பு சிறப்பாக இருந்ததன் மூலம் அடுத்தடுத்த பட வாய்ப்பினை பெற்றார்.
அந்த வகையில் இவர் தெலுங்கு ,இந்தி போன்ற பிற மொழி படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது இதனை தொடர்ந்து அவர் ராம் கோபால் வர்மாவின் இயக்கத்தில் ஜேம்ஸ் என்ற18 + படத்தில் நடித்தார்.இதன் முலம் பட்டி தொட்டி எங்கும் புகழ் பரவியது மேலும் இந்தியா முழுவதும் இவரை பேச வைத்தது இப்படத்தினை தொடர்ந்து அவருக்கு சொல்லுமளவிற்கு பட வாய்ப்புகள் இல்லாததால் கடைசியாக ஜீவா நடிப்பில் வெளிவந்த கச்சேரி ஆரம்பம் படத்தில் ஒரு குத்து டான்ஸ் போட்டார்.
அதன் பிறகு சொல்லும் அளவிற்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால் டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு தற்போது செட்டிலாகிவிட்டார் கடைசியாக இவர் இந்திய கால்பந்து லீக் துவக்க விழாவில் தான் அவரை மிடியா முன்பு பார்க்கப்பட்டது.இதோ அந்த புகைப்படம் .