Marimuthu son and daughter : சிறந்த நடிப்பை வெளிப்படுத்துபவர்கள் எப்பொழுதுமே மக்கள் மனதில் இருப்பார்கள் அந்த வகையில் குணச்சித்திர வேடங்களிலும், வில்லனாகவும் நடித்து மக்களை கவர்ந்தவர் மாரிமுத்து இவர் முதலில் “வாலி” படத்தில் நடித்த அறிமுகமானார் அதன் பிறகு பைரவா, யுத்தம் செய், கொம்பன் என நல்ல நல்ல படங்களில் நடித்து வந்தார்.
கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் கைகோர்த்து ஜெயில் திரைப்படத்தில் வில்லனுக்கு ஆலோசனை சொல்லும் ஒரு நபராக நடித்து கைத்தட்டல் வாங்கினார் அதனை தொடர்ந்து இந்தியன் 2 திரைப்படத்திலும் மாரிமுத்து அவர்கள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிப்பில் கவனத்தை செலுத்திய மாரிமுத்து இயக்குனராகவும் கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற படங்களை இயக்கியுள்ளார் இவர் அண்மையில் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகள் மத்தியில் இடம் பிடித்தார் இவர் “ஏய் என்னமா” என்னும் டயலாக் பலருக்கும் ஃபேமஸாக இன்று வரை இருந்து வருகிறது.
இப்படி மீடியா உலகில் ஜொலித்த மாரிமுத்து இன்று டப்பிங் பணி ஒன்றை முடித்துவிட்டு வீடு திரும்பும் வழியில் மாரடைப்பால் இயற்கை எய்தினார் இவர் இறந்த செய்தியை கேட்டு பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர் வர முடியாதவர்கள் ட்விட்டர் பக்கங்களில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மாரிமுத்துவின் மகன் மற்றும் மகள் என்ன செய்கிறார்கள் என்பது குறித்து நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது. மாரிமுத்துவின் மகன் எம் பி ஏ முடித்துவிட்டு ஒரு பெரிய கம்பெனியில் நல்ல சம்பளம் வாங்கும் நிலையில் இருக்கிறாராம். அவரது மகள் பிகாம் படிப்பை முடித்துவிட்டு எம்பிஏ இப்ப தான் சேர்ந்து உள்ளார் என கூறப்படுகிறது. மகனின் பெயர் அகிலன், மகளின் பெயர் ஐஸ்வர்யா.