தளபதி விஜய் பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 66 வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் சூப்பராக நடித்து முடித்துள்ளார் இந்த படத்தை வம்சி இயக்கி உள்ளார் தில் ராஜு மிக பிரம்மாண்ட பொருளர் தயாரித்திருக்கிறார் படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாக்கலமாக ரிலீஸ் ஆக இருக்கிறது.
வாரிசு படம் முழுக்க முழுக்க ஒரு குடும்ப செண்டிமெண்ட் கதையாக உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் விஜய் உடன் கைகோர்த்து பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. நாளை கோலாகலமாக சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில்..
வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் நடைபெற உள்ளது இதில் விஜய் மற்றும் படத்தில் நடித்த பல பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். மேலும் பல முக்கிய சினிமா பிரபலங்களும் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன. இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் நடிகர் விஜய் பற்றிய செய்திகள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.
விஜய் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் நண்பன் இந்த படத்தில் விஜய் உடன் கைகோர்த்து சக்தியன், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். இந்த படத்தில் மிக முக்கியமான காட்சி என்றால் விஜயைப் பார்த்து ஜீவா, ஸ்ரீகாந்த் பேண்டை கழற்றி யூ ஆர் கிரேட் என காட்டும் காட்சி வேற லெவலில் இருக்கும்..
நண்பன் படத்தை பார்த்துவிட்டு விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் பேண்டை கழட்டி “தலைவா” என வாழ்த்தினாராம். இதனை பார்த்த விஜய் ஒரு நிமிடம் ஷாக்காகி போய்விட்டாராம்.. இந்த செய்தி தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.