சிம்புவை என்ன அடிக்க சொன்னாங்க.! இப்ப நினைச்சா பெருமையா இருக்கு.. எனக் கூறிய ராதிகா.

RATHIKA
RATHIKA

தற்பொழுது வெந்து தணிந்தது காடு படத்தின் 50-வது நாள் வெற்றி விழா கொண்டாட்டத்தில் நடிகை ராதிகா அவர்கள் பேசியிருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது சில வருடங்களுக்கு முன்பு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருந்த நடிகர் சிம்பு ஒரு கட்டத்தில் பல பிரச்சனைகளில் சிக்கிக்கொண்டார் இதனால் இவரால் திரைப்படங்களில் நடிக்க முடியாமல் போனது.

குறிப்பிட்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமாவிற்கு அறிமுகமான இவருடைய திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்தது இப்படிப்பட்ட நிலையில் தன்னுடைய உடல் எடையை முடிந்த அளவு குறைத்து ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.‌ஆனால் இந்த திரைப்படமும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை.

இப்படிப்பட்ட நிலையில் இதனை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியினை கொடுத்து இருக்கிறது. மேலும் இவருடைய சினிமா கேரியரில் இது ஒரு திருப்புமுனையாக அமைந்தது எனவும் கூறலாம். இதனைத் தொடர்ந்து இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு.

இந்த திரைப்படத்தினை இயக்குனர் கௌவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்தார் இந்த படமும் மிகப்பெரிய வெற்றியினை பெற்றது. இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த இருந்தார் மேலும் சிம்புவுடன் இணைந்து ராதிகா, சித்தி இத்னாணி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். மேலும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்த நிலையில் சிம்பு அவர்கள் முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் இந்த படத்தின் இரண்டாவது பாகம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தின் 50வது நாள் வெற்றி கொண்டாட்ட விழா சென்னை சத்தியம் திரையரங்குகளில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் நடிகர் சிம்பு, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், தயாரிப்பாளர் ஐஞ்சரி கணேஷ், சரத்குமார் உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் பங்கு பெற்று சிறப்பித்து இருந்தார்கள்.

அந்த வகையில் இந்த விழாவில் பேசிய நடிகை ராதிகா எனக்கும் சிம்புவின் அம்மா அப்பாவிற்கும் நீண்ட வருட பழக்கம் நாங்கள் மிகவும் நெருக்கமானவர்கள் ஒருமுறை அவர்கள் இருவரும் என்னிடம் வந்து ராதிகா சிம்புவை கொஞ்சம் திட்டுப்பா சொல்ற பேச்சை கேட்க மாட்டேங்கிறான் என சொன்னார்கள் அதற்கு நான் சிம்புவிடம் உன்னோட பலம் உனக்கு தெரியல சிம்பு உன் பலம் என்னன்னு தெரிஞ்சுக்க நீ மீண்டும் வந்து  I Am the Bestனு  சொல்லனும்னு சொன்ன இப்போ சிம்புவை நினைத்து பெருமையாக இருக்கு என்று பேசியிருக்கிறார்.