ஒரு சில நடிகைகள் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கும் போது அவர்கள் செய்யும் சிறு சிறு தவறினால் தனது மொத்த மார்க்கெட்டை இழந்து விடுவார்கள். அந்த வகையில் ஒருவர் தான் நடிகை அபிராமி. இவர் தமிழில் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த விருமாண்டி திரைப்படத்தில் நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.
இத்திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது. இவர் தமிழை விடவும் மலையாளத்தில் முன்னணி நடிகை ஆவார். அந்தவகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று தென்னிந்திய மொழிகளில் நடித்து முன்னணி நட்சத்திரமாக கலக்கி வந்தார்.
இவ்வாறு சோலோ ஹீரோயினாக கலக்கி வந்த இவர் திருமணம் செய்து கொண்டதால் இவரின் மொத்த மார்க்கெட்டை இழந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போனது. தற்போது இவர் கதாநாயகியாக நடிக்க ஆசைப்பட்டாலும் குணசித்திர நடிகையாக மட்டும் நான் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது.
ஆனால் அபிராமி துணை நடிகையாக அறிமுகமாகி இதன் மூலம் ஹீரோயினாக நடித்து விடலாம் என்ற ஆசையில் மீண்டும் சினிமாவிற்கு அறிமுகமானார்.ஆனால் தற்போது இது நிறைவேறாது என்பதை அறிந்து சீரியல் ஒன்றில் நடிக்கவுள்ளார். வகையில் சன் நிறுவனத்தின் மலையாள சேனலான சூர்யா தொலைக்காட்சியில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
பொதுவாக வெள்ளித்திரையில் பிரபலமடைந்த பலர் தனது இறுதி காலகட்டங்களில் சில ஆண்டுகள் சின்னத்திரையில் நடிப்பது வழக்கம் ஆனால் இவ்வாறு கமலஹாசன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து இப்படி சின்னத்திரையில் நடிக்கும் நிலமை வந்துவிட்டதே என்று கூறி வருகிறார்கள் ரசிகர்கள்.