விஜய் ஆண்டனியின் “ரத்தம்” படத்திற்கு கிடைத்த சென்சார் சான்றிதழ் என்ன தெரியுமா.?

Ratham

Vijay Amtony in Raththam : தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலம் விஜய் ஆண்டனி. இவர்  இசையமைப்பாளராகவும், இயக்குனராகவும், நடிகராகவும் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறார் முதலில் இசையமைப்பாளராக சில படங்களுக்கு இசையமைத்து பிரபலம் அடைந்தார்.

திடீரென நான் படத்தில் நடித்து ஹீரோவாக என்ட்ரி  கொடுத்தார் முதல் படம் வெற்றி பெற்றது இதைத் தொடர்ந்து சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், எமன், சைத்தான் கோடியில் ஒருவன் என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து ஓடி கொண்டிருக்கிறார்.

இருபினும் கடைசியாக இவர் நடிப்பில் வெளியான  கொலை படம் சுமாராக ஓடின. இப்படி சினிமா உலகில் படும் பிஸியாக ஓடும் விஜய் ஆண்டனிக்கு பிச்சைக்காரன் 2 படத்தின் போது விபத்து ஏற்பட்டது அதனை தொடர்ந்து அவருடைய மூத்த மகள் மீரா சமீபத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விஜய் ஆண்டனிக்கு சோகங்களே நிறைந்து வருவதால் வீட்டை விட்டு சில நாட்கள் வெளிவராமல் இருந்து வந்த நிலையில் மீண்டும் படப்பிடிப்பிற்கு வந்துள்ளார். இந்த நிலையில் விஜய் ஆண்டனி நடிப்பில் அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள ரத்தம் திரைப்படம் குறித்து ஒரு தகவல்  வெளிவந்துள்ளது.

படத்தில் விஜய் ஆண்டனி உடன் இணைந்து இந்த படத்தில் மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன், ஜெகன் கிருஷ்ணன் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர். ரத்தம் படத்திற்கு சென்சார் போர்டு யு/ ஏ சான்றிதழ் வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன. வருகின்ற அக்டோபர் 06 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதோ நீங்களே பாருங்கள்.

Ratham
Ratham