தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக வலம் வருவர் நடிகர் அஜித்குமார். இப்போ இவர் இயக்குனர் ஹச். வினோத்துடன் மீண்டும் ஒருமுறை கைக்கோர்த்து நடித்துள்ள திரைப்படம் துணிவு. இந்த படத்தை மிக பிரம்மாண்ட பொருள் செலவில் போனி கபூர்.
இந்த படம் ஒரு உண்மை கொள்ளை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கிறதாம்.இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது. துணிவு படத்தில் அஜித் ஆக்சன், சென்டிமென்ட், டான்ஸ் அனைத்திலும் அற்புதமாக நடித்திருக்கிறார் என கூறப்படுகிறது.
அவருடன் இணைந்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், இளம் நடிகர் வீரா, சமுத்திரக்கனி, யோகி பாபு, ஜான் கொக்கன், அஜய், மகாநதி சங்கர் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் சூப்பராக நடித்துள்ளனர். படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக வெளியாக இருக்கிறது.
அதற்கு முன்பாகவே மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்திழுக்க படக்குழு அடுத்தடுத்த அப்டேட்களை கொடுக்க தீவிரம் காட்டி உள்ளது. இதுவரை துணிவு திரைப்படத்திலிருந்து ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர்கள் மட்டுமே வெளிவந்த நிலையில் அடுத்ததாக துணிவு படத்திலிருந்து சில்லா சில்லா பாடலை படக்குழு கொடுக்க இருக்கிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் அஜித்தின் துணிவு பட இசையமைப்பாளர் ஜிப்ரான் சில அப்டேட்டுகளை கொடுத்துள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது என்னவென்றால் பாடல்கள் அனைத்தும் பக்கா மாஸாக வந்திருக்கு அஜித் ரசிகனா என்ன பண்ண முடியுமோ அதை செய்து இருக்கிறேன் என கூறியுள்ளார் இது தற்பொழுது அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது மேலும் இந்த தகவலை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.