ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுடன் காதல்..! வலியும் வேதனையுடன் வெளிவந்த என்ன சொல்ல போகிறாய் திரைப்பட ட்ரைலர்..!

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் அஸ்வின் குமார் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் பிரபலமானார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

இவ்வாறு இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்ற நமது நடிகர் முதன்முதலில் செல்லமே என்ற சீரியலின் மூலம் தான் திரையில் முகம் காட்ட ஆரம்பித்தார் மேலும் இந்த சீரியலை தொடர்ந்து லட்சுமி கல்யாணம், தாமரை, தமிழ்ச்செல்வி போன்ற பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான ஆதித்யா வர்மா என்ற திரைப்படத்தில் கூட துருவ் விக்ரமிற்கு அண்ணனாக நடித்திருப்பார். இவ்வாறு இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவருக்கு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தது.

ஆனால் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த தயங்கிய அஸ்வின் தனக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் என்ன சொல்லப்போகிறார் என்ற திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார்.

இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளப் பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்த திரைப்படமானது ஒரு காதல் திரைப்படமாக அமைந்தது.

அந்த வகையில் ஒரே நேரத்தில் அஸ்வின் இரண்டு கதாநாயகிகளை காதலிக்கும் வகையில் இந்த திரைப்படம் உருவான நிலையில் இந்த ட்ரெய்லர் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.