என்னதான் முட்டி மோதினாலும் இந்த வருஷம் பருப்பு வேகாத நான்கு ஹீரோக்கள்..! லிஸ்ட்ல நம்ம ஹீரோவும் இருக்காரே..!

flap-movie
flap-movie

தமிழ்நாட்டில் சில வருடங்களாகவே வைரஸ் தொற்று காரணமாக எந்த ஒரு படப்பிடிப்புகளும் நடத்த முடியாமல் திரை உலகம் படாத கஷ்டம் பட்டு வந்தன அந்த வகையில் உருவான திரைப்படங்கள் பல இணையத்தில் வெளியாகி வெற்றி பெற்றது அதுமட்டுமில்லாமல் சில முன்னணி நடிகர்களின் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி தோல்வியையும் சந்தித்துள்ளது.

பூமி நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான பூமி திரைப்படம் ஆனது மிக பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த திரைப்படமாகும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால்  ரோனிட் ராய் மற்றும் சதீஷ் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.  பொதுவாக ஜெயம் ரவி சமுதாயம் சார்ந்த திரைப்படங்களில் நடித்து வெற்றி கண்டுள்ளார் ஆனால் விவசாயம் பற்றி நடித்த இந்த திரைப்படம் மாபெரும் தோல்வியை சந்தித்துள்ளது.

லாபம் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் ஆனது எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமாகும். இவ்வாறு இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதன் காரணம் அந்த படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகரித்து அதுமட்டுமில்லாமல் விவசாய பூமியை  எப்படி காப்பாற்றுவது என்பது அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது.

ஜகமே தந்திரம் பிரபல முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் அவர்கள்தான் இயக்கியிருந்தார்.  இவ்வாறு உருவான இந்த திரைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை துண்டிய நிலையில் படம் படு தோல்வி அடைந்து விட்டது.

அரண்மனை  மூன்றாம் பாகம் சுந்தர் சி இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் ஆர்யா சாக்ஷி அகர்வால் ஆண்ட்ரியா ராசி கண்ணா போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்த இந்த திரைப்படம் பாரதி அம்மான கதையம்சம் கொண்ட எழுந்தாலும் படம் படுதோல்வியை சந்தித்தது என்று சொல்லலாம்.