அஜித் சொன்னது அப்படியே பளிச்சிடுச்சு. தலைகால் புரியாமல் சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் பிரபல நடிகர்.!

Ajith
Ajith

John kokken : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வரும் அஜித் துணிவு படத்திற்கு பிறகு லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள விடாமுயற்சி படத்தில் நடிக்க இருப்பதாக இரண்டு மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது ஆனால் ஷூட்டிங் தொடங்குவதற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லை என்பதால் ட்ராப்பானது என பலரும் கூறி கமெண்ட் அடித்தனர்.

நேற்று சந்திரமுகி 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன் விடாமுயற்சி படம் குறித்து கூறினார்.  விடாமுயற்சி படம் வெகு விரைவிலேயே தொடங்க உள்ளது எங்களுக்கு அது மிகப் பெரிய ப்ராஜெக்ட் என கூறி உள்ளார் இதை கண்ட ரசிகர்கள் குஷியில் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் அஜித்  பற்றி ஒரு நடிகர் பேசியது தற்போது ரசிகர்களுக்கு குஷியை கொடுத்துள்ளது. சினிமா உலகில் போராடிக் கொண்டிருந்த ஜான் கொக்கன் முதலில் வில்லனுக்கு அடியாளாக நடித்து வந்தார் அப்படித்தான் அஜித்தின் வீரம் படத்தில் நடித்தாராம் அந்த சமயத்தில்  அஜித் ஜான் கோக்கனை சந்தித்து உனக்கு திறமை இருக்கிறது. பொறுமையாக இரு நிச்சயம் நல்ல வாய்ப்பு கிடைக்கும் என கூறினாராம்.

அதன் பிறகு பாகுபலி, கேஜிஎப் போன்ற படங்களில் நடித்து அசத்தினார் பிறகு பா ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை படத்தில் குத்துச் சண்டை வீரராக வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார். இதனால் தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நபராக மாறியதோடு மட்டுமல்லாமல் அஜித் நடித்த துணிவு படத்தில் மெயின் வில்லனாக நடித்து அசத்தினார்.

தற்பொழுது பலருக்கும் பரிச்சயமான முகமாக இருக்கும் ஜான் கொக்கன்   பாலிவுடிலும் ஒரு வெப் சீரிஸில் நடித்து வருகிறார். இந்த நிலையில்  அஜித் பற்றி ஜான் கொக்கன் சொன்னது துணிவு படத்தின் படப்பிடிப்பு போது என்னை பார்த்து நீங்கள் பாலிவுட்டில் விரைவில் நடிக்க போகிறீர்கள் என்று சொன்னார்.

John kokken
John kokken

அவர் சொன்னது போலவே துணிவு படம் முடிந்த உடனேயே ஹிந்தி வெப் சீரிஸில் கையெழுத்து விட்டேன் தற்பொழுது அதில் நடித்துக் கொண்டிருக்கிறேன் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அவர் சொன்னது நடந்து விட்டது தன்னுடன் நடிக்கும் சின்ன சின்ன நடிகரின் திறமையை கவனித்து அவர்களை ஊக்குவிக்க கூடியவர் அப்படித்தான் என்னையும் பார்த்து பாலிவுட் வரை செல்வீர்கள் என்று சொன்னார் அது நிஜமாகிவிட்டது.