மணிரத்தினம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மிகவும் கோலாகலமாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது எனவே இந்த படத்தில் நடித்த பிரபலங்கள் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் மற்றும் ஏராளமான முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டார்கள்.
அந்த வகையில் நடிகர் கமல்,ரஜினி உட்பட இன்னும் சில இயக்குனர்களும் சிறப்பு விருந்தினராக பங்கு பெற்றார்கள்.இவ்வாறு அந்த இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பல முன்னணி நடிகர்கள் பட குழுவினர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை கூறியுள்ளார்கள். அந்த வகையில் இந்த திரைப்படத்தில் நந்தினி என்ற மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் இருந்து வெளியான டீசர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளாத இவர் சமீபத்தில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் மேலும் மும்பையில் இருந்து சென்னை வந்த ஏர்போர்ட் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலானது இப்படிப்பட்ட நிலையில் தற்போது இசை வெளியீட்டு விழாவில் இவர் கலந்து கொண்ட வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்ற வருகிறது.
உலக அழகியான ஐஸ்வர்யா ராய் தமிழ் சினிமாவிற்கு முதன் முதலில் இயக்குனர் மணிரத்தினத்தின் மூலம் தான் அறிமுகமானார். அதன் பிறகு தான் இவர் தொடர்ந்து ஏராளமான வெற்றி திரைப்படம் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் இப்படிப்பட்ட நிலையில் இதனை மறக்காது ஐஸ்வர்யா ராய் மணிரத்தினம் எந்த திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்றாலும் கதையை கூட கேட்காமல் ஓகே சொல்லி விடுவாராம்.
மேலும் இயக்குனர் மணிரத்தினத்தின் மீது வைத்துள்ள குரு மரியாதை அவர் எப்பொழுதும் வெளிப்படுத்துவாராம் அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு ஐஸ்வர்யா ராய் இயக்குனர் மணிரத் தினத்தை கண்டதும் கட்டிப்பிடித்து தன்னுடைய அன்பை பரிமாறிக் கொள்கிறார் அந்த வீடியோ தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய இதுதான் குரு மரியாதை என பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.