பிக் பாஸ் அனிதாவின் தந்தை திடீர் மரணம் சோகத்தில் ரசிகர்கள்.!

Anithasampath
Anithasampath

சின்னத்திரையில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி என்றால் அது சீரியல்கள் மற்றும் பிக் பாஸ் தான் உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது பிக் பாஸ் சீசன் 4 என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டு ஒவ்வொரு டாஸ்கிலும் வெற்றி பெற்று வருகிறார்கள் ஆனால் ஒரு சில பிரபலங்கள் பிக் பஸ் வீட்டை விட்டு வெளியேறி வருகிறார்கள்.

அந்த வகையில் அண்மையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி வந்தவர்தான் அனிதா சம்பத் இவருக்கு இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது எந்த ஒரு வருத்தத்தையும் கொடுக்கவில்லை ஏனென்றால் அவர் தனது குடும்பத்துடன் இந்த வருடம் நியூயரை கொண்டாடுவது தான் காரணம்.

மேலும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி வந்த அனிதா சம்பத் இதுவரை எந்த ஒரு பதிவும் சமூக வலைதளங்களில் போடவில்லை.

இந்நிலையில் அனிதாவின் குடும்பத்திலிருந்து ஒரு துயர செய்தி சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.அந்த செய்தி என்னவென்றால் அனிதாவின் அப்பாவும் எழுத்தாளருமான சம்பத் இன்று மாரடைப்பால் திடீரென உயிரிழந்துள்ளார்.

மேலும் இந்த தகவல் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் இந்த தகவலை அறிந்த அனிதாவின் ரசிகர்கள் பலரும் இப்படி ஒரு துக்க செய்தி நடந்திருக்கக் கூடாது என கூறி வருகிறார்கள்.