தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தல அஜித். தல அஜித் அவர்கள் சினிமா உலகில் பல வெற்றி தோல்வியை படங்களை கொடுத்துள்ளார் இருந்தாலும் அதனை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அடுத்தடுத்த படங்களில் தனது கடின உழைப்பை வெளிப்படுத்தி நடித்து வருவதையே குறிக்கோளாக வைத்து வருக்கிறார். அந்த வகையில் தல அஜித் தனது ஐம்பதாவது படத்தில் கடின உழைப்பை வெளிப்படுத்தி இருந்தார். இப்படத்தை வெங்கட்பிரபு அவர்கள் இயக்கியிருந்தார்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது அதற்கு ஏற்றார்போல வெங்கட்பிரபு அவர்களும் அஜித்திற்கு என ஒரே சிறந்த கதையை இயக்கியிருந்தார் திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து மிகப்பெரிய அளவில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது இப்படத்தில் அஜித் அவர்களை வித்தியாசமான ஸ்டைலில் வெங்கட் பிரபு காட்டியிருந்தார் பெரும்பாலும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்ததில்லை நடிகர் அஜித் ஆனால் தனது 50-வது படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்து சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் இதனை அடுத்து பல இளம் தலைமுறைகள் மற்றும் முன்னோடிகளும் பலரும் டை அடிப்பதை விட்டுவிட்டு சாட் பேப்பரில் சுற்றி திரிந்தனர்.
மங்காத்தா படத்திற்கு உறுதுணையாக அமைந்தது தல அஜித் பிரதான இசைமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு மேலும் கூடுதல் பலம் சேர்த்தார் இவரது தீம் மியூசிக் மிகப்பெரிய அளவில் வைரலானது தற்பொழுது வரையும் அஜித் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போன இசைக்காக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் அஜித் மற்றும் அஜித் ரசிகர்களுக்கு மிக சிறப்பான படம் என்பதால் இப்படத்தினை தொடர்ந்து மங்காத்தா 2 படம் வெளிவர வேண்டும் என ஆவலுடன் காத்துக் கொண்டு வருகின்றனர்.
இந்த சமயத்தில் ஒரு மீடியா அஜித் மற்றும் வெங்கட்பிரபு இடையே மனக் கசப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியிட்டனர்.அஜித் அவர்கள் விசுவாசம் படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்தபோது தனது அடுத்த படத்தை குறித்து வெங்கட் பிரபுவை அழைத்து பேசியுள்ளார். தல அஜித்தும், வெங்கட்பிரபுவும் இணைந்து பல விஷயங்களை பேசி உள்ளனர்.மேலும் அவர்கள் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெங்கட்பிரபு அவர்கள் மறுநாள்இணையதளத்தில் வெளியிட்டதால் வெங்கட்பிரபு அஜித்துக்கும் இடையே மனக் கசப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது இது குறித்து ஆராய்ந்த பொழுது அஜித் வெங்கட் பிரபு சந்திப்பு மிக இனிமையாக நடந்ததாகவும் அதே சமயம் கதை குறித்து பேசியதாகவும் கூறப்படுகிறது.
இவர்கள் இடையில் எந்த ஒரு மனக்கசப்பும் இல்லை தற்பொழுது இருவரும் நல்லதொரு தொடர்பில் இருந்து வருகிறார்கள் கண்டிப்பாக எதிர்காலத்தில் மங்காத்தா 2 ஏதோ ஒரு புதிய கதையில் இவர்கள் கூட்டணி இணையும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.