விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் ஈரமான ரோஜாவே 2 வித்தியாசமான கதைய களத்துடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் தற்பொழுது ஏராளமான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இந்த சீரியலில் காவியா, பிரியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த சீரியலில் காவியா என்ற கதாபாத்திரத்தில் கேப்ரியல்லாவும், பிரியா கதாபாத்திரத்தில் சுவாதி கொண்டே இருவரும் நடித்து வருகிறார்கள். மேலும் இவர்களை தொடர்ந்து திரவியம், சித்தார் இருவரும் ஹீரோவாக நடித்து வருகின்றனர். இந்த சீரியலில் பார்த்தி, ஜீவா இருவரும் அண்ணன் தம்பிகளாகவும் மேலும் அதேபோல் பிரியா, காவியா அக்கா தங்கைகள் ஆவார். இருவரும் அண்ணன் தம்பிகளை திருமணம் செய்து திருமணம் செய்து கொண்டனர்.
ஜீவா, காவியா இருவரும் காதலித்து வந்த நிலையில் பார்த்தி, பிரியா திருமணத்தின் பொழுது ஏற்பட்ட பிரச்சனையினால் ஜீவாவிற்கு பிரியாவும், பார்த்திக்கு காவியா என மாறி மாறி திருமணம் நடைபெற்ற விடுகிறது. காவியா-ஜீவா காதலித்தது யாருக்கும் தெரியாமல் இருந்து வரும் நிலையில் காவியா மட்டும் வேறு ஒருவரை திருமணத்திற்கு முன்பு காதலித்து உள்ளார் என அனைவருக்கும் தெரிய வந்திருக்கிறது இதனால் குடும்பத்தில் பல பிரச்சினைகள் அரங்கேறி வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் இந்த சீரியலில் பிரியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுவாதி பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது சுவாதி கன்னட மொழியின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி அதன் பிறகு தொடர்ந்து கன்னட திரைப்படங்களில் நடித்து வருவதோடு மட்டுமல்லாமல் கன்னட சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழுக்கு ஈரமான ரோஜாவே 2 சீரியலின் மூலம் அறிமுகமாக ஜீவா-பிரியா இவர்களுடைய காம்பினேஷன் வேற லெவல் இருந்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் இவர்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் சுவாதியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.