தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை வாணி போஜன் இவர் முதலில் “ஓர் இரவு” என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து ஒ மை கடவுளே, லாக்கப் போன்ற படங்களில் நடித்து வந்த வாணி போஜனுக்கு 2023 ஆம் ஆண்டு அமோக ஆண்டாக அமைந்துள்ளது. கைவசம் மட்டுமே 10 படங்கள் வைத்திருக்கிறார்.
பகைவனுக்கு அருள்வாய், casino, லவ், ஊர் குருவி, ரகளை, ஆரியன் மற்றும் ஒரு சில படங்களில் இவர் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இப்படி படும் பிஸியாக ஓடிக்கொண்டிருக்கும் நடிகை வாணி போஜன் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார் அப்படி அண்மையில் பேட்டி ஒன்றில் சில விஷயங்களை வெளிப்படையாக போட்டு உடைத்து உள்ளார்.
நடிகர் ஜெய்யும், வாணி போஜனும் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் இருவரும் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வருவதாகவும் பரவிய தகவல் குறித்து நேர்காணலில் வாணி போஜன் பேசி உள்ளார்.. இந்த மாதிரி எழுதுறப்போ நான் ஜெய் இடமே என்னது இதெல்லாம் என்று பேசினேன் ஜெய் உடன் ரிலேஷன்ஷிப் என்று எழுதி இருந்தால் கூட கவலைப்பட்டு இருக்க மாட்டேன்..
ஆனால் லிவிங் ரிலேஷன் அப்படின்னு எழுதினது ரொம்ப சீப்பாக இருந்தது கஷ்டப்பட்டு லோன் வாங்கி வீடு கட்டி சொந்த வீட்டிலே இருக்கேன் இதுல வந்து யாரோ ஒருத்தரோட வீட்டுல அவர் கூட லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருக்குன்னு சொல்றது ரொம்ப சீப்பான விஷயம் என கூறினார்.
மேலும் நடிகை வாணி போஜன் வீட்டில் திருட்டு குறித்த பேசியது என் வீட்டுக்குள்ள வர்ற அளவுக்கு எதுவுமே இல்ல.. இப்போ என் வீட்டுல பாஸ்வேர்டு போட்டு இருக்கேன் அதனால யாரும் உள்ள வர முடியாது திருடுற அளவுக்கு நான் யாரையும் வீட்ல வச்சிக்கல.. என கூறினார். தொடர்ந்து பல்வேறு விதமான கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.