புதிய திருமண ஜோடி விக்கி – நயன்தாரா இருவரின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

viki and nayanthara
viki and nayanthara

சினிமா திரையுலகமே எதிர்பார்த்த விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் கல்யாணம் கடந்த ஜூன் 9-ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ரெஸ்டாரன்ட் ஒன்றில் கோலாகலமாக நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் ஷாருக்கான், ரஜினி, கார்த்தி, சூர்யா, டிடி, அனிருத் போன்ற பலரும் கலந்து கொண்டு திருமணத்தை சிறப்பித்தனர்.

மேலும் திருமணத்தில் கலந்து கொண்ட பலருக்கும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி தங்க வெள்ளி காசுகளை பரிசாகவும் அளித்துள்ளனர். திருமணம் முடிந்த கையோடு நேற்று திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்துகொண்ட விக்னேஷ் சிவன் நயன்தாரா..

ஒரு சர்ச்சையில் சிக்கி அதற்காக மன்னிப்பு கேட்டு தற்போது அந்தப் பிரச்சினை முடிவடைந்த நிலையில் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒரு ஹோட்டலில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது விக்னேஷ் சிவன் நான் முதன்முதலாக நயன்தாராவிடம் கதை சொல்ல..

இந்த ஹோட்டலில்தான் அவரை சந்தித்தேன் அதனால்தான் இந்த ஹோட்டலில் செய்தியாளர்கள் மீட்டிங் வைத்தேன் எனவும் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா ஒரு படத்திற்கு 3 கோடி முதல் 5 கோடி வரை சம்பளமாக வாங்குகின்ற நிலையில் அவரது முழு சொத்து மதிப்பு 70 ஒரு கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

தமிழ்சினிமாவில் இயக்குனராகவும், பாடகராகவும் கலக்கி வரும் விக்னேஷ் சிவன் படங்களை இயக்குவதற்கு 3 கோடி வரை சம்பளம் வாங்குகின்ற நிலையில் இவரது சொத்து மதிப்பு சுமார் 50 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.