டான் படத்தின் வசூலுக்கு ஆப்பு.? செம்ம கோபத்தில் சுத்தும் சிவகார்த்திகேயன்.

ton
ton

தமிழ் சினிமாவில் மாஸ் கலந்த படங்களை கொடுத்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். அதனால் இவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் பற்றி  ஹிட் அடிக்கின்றன.அந்தக் காரணத்தினால் இவரது மார்க்கெட் நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது.

சொல்லப்போனால் ரஜினி, அஜித், விஜய் ஆகியவர்கள் இருக்கும் லிஸ்டில் சிவகார்த்திகேயனும் இடம் பிடிக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயன் டாக்டர் திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான திரைப்படம் டான் இந்த படம் முழுக்க முழுக்க கல்லூரி சம்பந்தப்பட்ட படமாக எடுக்கப்பட்டு இருந்தாலும்..

இந்த படத்தில் முழுவதும் காமெடி ஆக்ஷன் சென்டிமென்ட் என அனைத்தும் சிறப்பாக இருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது இந்த படம் நேற்று கோலாகலமாக ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்து பிரியங்கா அருள் மோகன், சூரி, சிவாங்கி, சமுத்திரக்கனி மற்றும் பலர் டான் திரைப்படங்களில் நடித்து அசத்தி இருந்தார். படம் கலவையான விமர்சனத்தை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தின் வசூலை குறைக்க சைலண்டாக வேலை நடக்கிறது.

நேற்று சிவகார்த்திகேயனின் டான் படம் வெளியாகியது  காலை பதினோரு மணிக்கெல்லாம் தமிழ் ராக்கர்ஸ்  இந்த படத்தை டெலிகிராமில் லீக் செய்தது. இதனால் சிவகார்த்திகேயன் டான் படம் தற்போது வசூல் குறைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிய வருகிறது. அதுவும் முதல் நாளே டான் படத்தை டெலிகிராமில் லீக் செய்தது படக்குழுவை சற்று எரிச்சலடைய வைத்துள்ளதாம்.