வில்லன் கார்த்திகேயாவுக்கு கல்யாண தேதி பிக்ஸ் பண்ணியாச்சு.! பொண்ணு இவர்தான் – வெளியான அழகிய புகைப்படம்.

karthikeya
karthikeya

தெலுங்கு சினிமாவில் ஹீரோவாக நடித்து மக்களின் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் கார்த்திகேயா இவர் சமீபகாலமாக வில்லன் ரோலில் நடித்து வருகிறார். அந்த வகையில் அஜித்துடன் கை கோர்த்து வலிமை திரைப் படத்தில் வில்லனாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் அஜித்துடன் கார்த்திகேயா இருக்கும் புகைப்படங்களும் வேற லெவலில் ட்ரெண்டாகி உள்ளன. இப்படி ஓடுகின்ற இந்நிலையில் அண்மையில் அஜித் வலிமை படத்தின் சில காட்சிகளைப் பார்த்துவிட்டு நடிகர் கார்த்திக்கேயாவுக்கு போன் செய்து தம்பி உனது நடிப்பு வேற லெவல்.

உனது கதாபாத்திரம் மிகவும் வலிமை வாய்ந்த கதாபாத்திரமாக இருப்பதாக கூறி பேசினார். இதனால் நடிகர் கார்த்திகேயா செம்ம சந்தோஷத்தில் இருந்தார் அந்த சந்தோஷம் குறைவதற்குள் அடுத்த சந்தோஷத்தையும் தற்போது அவர் பெற்றுள்ளார். தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வெகு விரைவிலேயே திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல்கள் சமீபகாலமாக பரவியது.

இந்த நிலையில் தற்போது திருமணச் செய்தியை தற்பொழுது கான்பார்ம் மேலும் தேதியையும் லாக் செய்துவிட்டனர் சமீபத்திய திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் தனது திருமணத்தை அனைவரும் முன் வித்தியாசமாக அறிவித்தார். பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்தார். நடிகர் கார்த்திகேயா நவம்பர் 21ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும்  கூறியுள்ளார்.

நடிகர் கார்த்திக்கேயா தொடர்ந்து வெற்றி மேல் வெற்றியை குவித்து வரும் அவருக்கு இப்படி ஒரு சிறப்பான சம்பவம் நடைபெறுவது ரசிகர்களுக்கு துள்ளல் ஆட்டத்தை  போட வைத்துள்ளது. இதோ அவரின் சமீபத்திய புகைப்படங்கள்.