இனி பக்கத்து வீட்டில் பேசினால் கூட முகமூடி அணிந்து பேசுங்கள்.! டாக்டர் அறிவுரை

doctor prakash

தற்பொழுது இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது எனவே தொடர்ந்து பலர் உயிரிழந்து வருகிறார்கள். எனவே டாக்டர் பிரகாஷ் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் கூட பேச வேண்டாம் என பல அறிவுரைகளை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

சமூக இடைவெளிகளை பின்பற்ற சொன்னால் சொல்பவர்களை பைத்தியக்காரர்களாக நம் தமிழ்நாடு பார்க்கிறது. நான் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக மருத்துவராக பணியாற்றி பல நோய்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறேன். ஆனால் தற்போது 10 நாட்களாக நோயாளிகளுக்கு சிகிச்சை செய்ய முடியாமல்  கையறு நிலையில் இருப்பதாக உணருகிறேன்.

கொரோனாவில் இருந்து ஒருவரை காப்பாற்ற வேண்டுமானால் 90 முதல் 95 என்ற ஆக்ஸிஜன் அளவு கண்டிப்பாக இருந்தால் ஆன்டிவைரஸ் ஊசிகளை செலுத்தலாம் ஆனால் தற்போது வரும் பல லட்ச நோயாளிகளுக்கு 80 சதவீதம் அல்லது 75% மட்டும் இருப்பதால் அவர்கள் அடுத்த நாளே உயிரிழந்து விடுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

ஆக்சிஜன் பற்றாக் குறையினால் உயிரிழந்தவர்களை எக்ஸ்ரே  எடுத்து பார்த்தால் நுரையீரல் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மிகவும் ஆக்சிஜன் கம்மியாக உள்ளது என்று கூறினால் பயந்து விடுவார்கள்.

எனவே இதிலிருந்து நாம் தப்பிக்க வேண்டுமானால் நாம் அனைவரும் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருக்க வேண்டும் பக்கத்து கார்களுடன் பேசுவதைக்கூட தவிர்த்துவிட வேண்டும் அப்படி பேசினால் கண்டிப்பாக மாஸ்க் அணிந்திருக்க வேண்டும்.  அதோடு வீட்டில் இருக்கும் பொழுதும் அனைத்து நேரங்களும் மாஸ்க்கை கழட்ட கூடாது.

பசியின்மை, உடல் வலி, உடல் சோர்வு போன்றவை இருந்தால் கொரோனாவிர்கான அறிகுறி இதனைத் தொடர்ந்து ஐஸ்க்ரீம் சாப்பிட்டோம் ஜூஸ் சாப்பிட்டோம் அதனால்தான் சளி,தொண்டை வலி வந்துடுச்சு என்று நினைக்காதீர்கள் அதுவும் அதற்கான அறிகுறி தான் என்று கூறியுள்ளார்.

doctor prakash
doctor prakash

நாள்தோறும் ஆக்ஸிஜன் அளவை பரிசோதித்து பாருங்கள் 94 என்ற அளவை விட கீழே குறைந்தால் நீங்கள் உடனே மருத்துவரை அணுகி அதற்குரிய ஊசி செலுத்தி கொள்வது மிகவும் நல்லது. ஒரு வாரத்திற்கு நாம் அனைவரும் கிருமி நாசினி தெளித்து கால் விரலை சுத்தம் செய்து கொண்டும் முக கவசம் அணிந்து கொண்டும் வீட்டிலேயே இருந்தால்  கண்டிப்பாக ஒரு வாரத்தில் கொரோனா பரவலின் அளவு குறையும் என்று கூறியுள்ளார் டாக்டர் பிரகாஷ்.