சில்க் ஸ்மிதாவை நாம் கவர்ச்சியான உடையில் மட்டும் தான் பார்த்திருப்போம்.! அதையும் தாண்டி அவருக்கு இப்படி ஒரு மனசு இருக்கு யாருக்காவது தெரியுமா.? கண்கலங்கும் ரசிகர்கள்.

silk-sumitha
silk-sumitha

திரையுலகைப் பொறுத்தவரை ஒரு நடிகை தன் சொந்த மண்ணில் வெற்றி காண்கிறாரோ இல்லையோ பிறமொழி பக்கம் தனது திறமை மற்றும் அழகை காண்பித்து மக்கள் மனதில் இடம் பிடித்து தொடர் வெற்றிப் படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடிப்பார்கள் அந்த வகையில் ஆந்திராவில் பிறந்து மலையாள சினிமாவின் மூலம் அறிமுகமாகி பின் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை அமைத்திருந்தவர் தான் நடிகை சில்க் ஸ்மிதா.

இவர் வண்டிச்சக்கரம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார் அதன்பின் அலைகள் ஓய்வதில்லை, மூன்றாம் பிறை, சகலகலாவல்லவன், பட்டணத்து ராஜாக்கள், தீர்ப்பு, ரங்கா, தனிக்காட்டு ராஜா, பாயும் புலி பல்வேறு திரைப்படங்களில் குணத்சித்திர கதாபாத்திரத்திலும், ஐட்டம் டான்ஸர் ஆகவும், ஹீரோயினாகவும் நடித்து பல திறமையை வெளிக்காட்டினார்.

மேலும் எந்த ரோல் கொடுத்தாலும் தனது திறமையை வெளிக் காட்டியதால் வெகுவிரைவிலேயே அவர் ரஜினி கமல் விஜயகாந்த் பிரபு சத்யராஜ் போன்ற நடிகர்கள் படத்தில் நடித்தார். மேலும் படத்தின் கதைக்கு ஏற்றவாறு அதிரடியாக கவர்ச்சியை காட்டி நடிக்கவும் செய்தார் அதுவும் சாதாரணமாக அரைகுறை ஆடை அல்ல எந்த அளவிற்கு தன்னால் ஆடையை குறைத்து நடிக்க முடியுமோ அந்த அளவிற்கு குறைத்து நடித்து தன்னை அடிச்சிக்க ஆளே இல்லை என்ற  அளவிற்கு அவர் நடித்தார்.

அதன் விளைவாக தமிழை தாண்டி இவர் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் வாய்ப்பு வந்தது அதன் மூலம் இவர் 450 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி வெளியாகி பலரையும் கண்கலங்க வைத்தது. நேற்று சில்க் ஸ்மிதாவின் நினைவு நாளை முன்னிட்டு அவர் பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கவர்ச்சியை நடிகை என்ற பெயரை அவர் பெற்று இருந்தாலும் அதையும் தாண்டி பலருக்கும் உதவி செய்யும் நல்ல மனம் கொண்டவராக இருந்தவர் தான் சில்க் ஸ்மிதா அந்த வகையில் 1987 ஆம் ஆண்டு பிரான்ஸ், ஜெர்மனி, லண்டன் உட்பட நான்கு நாடுகளுக்கு ஸ்டார் நிகழ்ச்சியாக நடிகை சில்க் ஸ்மிதாவை அழைத்தனர். முதலில் தயங்கிய சில்க்ஸ் மிதா பிறகு பாதுகாப்பாய் அழைத்துச் சென்று அழைத்து வர வேண்டும் என  பாலன் என்பவரிடம் கூறினார்.

ஓகே என சொல்ல ஒரு நாட்டிற்கு இரண்டாயிரம் என கூறி பாலன் அப்போது தொகையாக கொடுத்தாராம். நாடுகளுக்கு சென்று திரும்பி வந்த பொழுது இந்த தொகை அவர் கொடுக்க சில்க் ஸ்மிதா வாங்க வில்லை. காரணம் அவர் அங்கு மக்கள் எனக்கு கொடுத்த அன்பு, பரிசு பொருட்களும் போதும் எனக் கூறி அந்த தொகையை வாங்கவில்லை.

இதே போல் தன்னை நம்பி வருபவர்களுக்கு பணத்தை அள்ளிக் கொடுத்து உள்ளார்.   தனது வீட்டில் பணிபுரியும் பெண்ணின் மகளுக்கு திருமணம் என கூற நடிகை சில்க் ஸ்மிதா பீரோவில் இருந்த கொத்தாக கைநிறைய நகைகளை அள்ளி கொடுத்துள்ளார் இதுபோன்று கண்ணுக்கு தெரியாத பல உதவிகளை அப்போது காட்டி உள்ளார் சில்க் ஸ்மிதா.