சினிமா உலகில் சூர்யாவும் அவரது தம்பியும் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வருகின்றனர். குறிப்பாக நடிகர் கார்த்தி கையில் ஏகப்பட்ட திரைப்படங்கள் இருக்கின்றன அந்த படங்கள் அனைத்துமே ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது அதில் ஒன்றான விருமன் படம் தற்பொழுது வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
‘இந்த படத்தை சூர்யா தயாரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ரிலீஸுக்கு பிறகு இந்த படத்தின் பல பிரமோஷன் வீடியோக்கள் தொடர்ந்து வெளி வருகின்றன. இப்படி இருக்கின்ற நிலையில் அண்ணன் சூர்யா குறித்து நடிகர் கார்த்தி பேசி உள்ளார். சின்ன வயதில் அனைத்து அண்ணன் தம்பிகள் போலவே நானும் சூர்யாவும்..
சண்டை போட்டுக் கொள்வோம் என்றும் சட்டை, பை என்று எதை எடுத்தாலும்.. இருவருக்கும் சண்டை வரும் என்றும் இருவரையும் ஒன்றாக தங்க வைக்க வீட்டில் பயப்படுவார்கள் என்றும் சூரியா தான் எப்பவுமே தன்னை அடிபார் என்றும் கார்த்தி தெரிவித்துள்ளார் வீட்டில் மட்டுமல்லாமல் பள்ளிக்கு சென்றாலும் ஸ்டுடென்ட்ஸ் ஹெட் பொறுப்பில் சூர்யா இருப்பதால் அங்கும் கார்த்தியை முட்டி போட வைப்பாராம்.
இப்படி சின்ன வயதிலிருந்தே சண்டை போட்டுக் கொண்டிருந்தவர்களிடையே கார்த்திக் வெளிநாட்டிற்கு படிக்க சென்றதும் ஒரு சின்ன இடைவெளி ஏற்பட்டதாம் அப்பொழுது படிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பி அவர் வீட்டிற்கு கூட செல்லாமல் நேராக தனது அண்ணன் சூர்யாவை பார்க்க கிளம்பி சென்று விட்டாராம் அப்பொழுது தான் இனம் புரியாத பாசம் சூர்யா மீது ஏற்பட்டதாக கார்த்தி கூறினார்.
சூர்யா தங்கி இருந்த ரூமுக்கு சென்று கதவை தட்டி பார்க்கையில் அவர் மொட்டை அடித்த தலையுடன் கருப்பாக இருந்ததால் ஆளே அடையாளம் தெரியவில்லையாம் சூர்யாவிடமே எனது அண்ணன் இல்லையா என கார்த்தி கேட்டாராம். அப்படி ஆரம்பித்த எங்கள் அண்ணன் தம்பி பாசம் தற்பொழுது ரொம்பவே மாறிவிட்டது என கூறினார்.