தமிழ் சினிமாவில் முன்பெல்லாம் குடும்ப கதாபாத்திரம் கொண்ட திரைப்படம் வலம் வந்ததைத் தொடர்ந்து அதன் பிறகு காதல் திரைப்படம் சண்டை காட்சி திரைப்படம் என பல்வேறு வகையான திரைப்படங்கள் உருவாகி வந்தது அந்த வகையில் இந்த திரைப்படங்களில் கதாநாயகனுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வந்த நிலையில் தற்போது கதாநாயகிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து சில திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
இன் நிலையில் சமீபத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களை தேடி தேடி நடிக்கும் கதாநாயகிகளை பற்றி பார்க்கலாம் வாங்க.
நடிகை நயன்தாரா இவர் ஆரம்பத்தில் கமர்சியல் திரைப்படங்களில் மட்டுமே கதாநாயகியாக நடித்து வந்தார் அதன் பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்து விட்டார் இந்நிலையில் அவர் டோறா, அறம், கோலமாவு கோகிலா, இமைக்க நொடிகள் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து வெற்றி கண்டுள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இவர் தமிழ் சினிமாவில் கமர்சியல் நாயகி என பலரும் போற்றி வருகிறார்கள் அந்த வகையில் இவர் சில திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் தென்பட்ட நமது நடிகை வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த வடசென்னை என்ற திரைப்படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் மிகவும் பிரபலமாகிவிட்டார். அதுமட்டுமில்லாமல் இவர் நடித்த காக்கா முட்டை திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது மட்டுமில்லாமல் இவை கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படமாக அமைந்தது.
நடிகை பிரியா பவானி சங்கர் இவர் சின்ன துறையில் இருந்து மிகப் பிரபலமாக பல்வேறு சீரியலில் நடித்த நமது நடிகை தற்போது மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரையில் அறிமுகமானார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து கார்த்திக் நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்பொழுது கதாநாயகி முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தில் நடித்தால் நல்லா இருக்கும் என காத்திருக்கிறாராம்.
நடிகை வாணி போஜன் இவர் சின்ன திறையில் நயன்தாரா என போற்றப்பட்டு வந்தவர் அந்த வகையில் இவரும் பிரியா பவானி சங்கர் ஆகிய இருவரும் ஒரே மாதிரி தான் என்ற சொல்லலாம் அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் லாக்கப் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஓ மை கடவுளே ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்தது மட்டும் இல்லாமல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தில் மட்டுமே நடிக்க அதிக அளவு ஆர்வம் காட்டி வருகிறார்.
நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் நடிகை திரிஷா முதன்முதலாக துணை கதாபாத்திரத்தில் நடித்து தான் திரையுலகில் அறிமுகமானார் தற்பொழுது இவருக்கு 39 வயது ஆனாலும் சரி இன்று வரை அவர் முன்னணி நடிகையாக வலம் வருவது மட்டும் இல்லாமல் தமிழ் மொழி மட்டும் இன்றி பிற மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்து வருகிறார்.
மேலும் சமீபத்தில் இவர் கமர்சியல் திரைப்படங்களில் நடித்து வந்தாலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடிப்பதில் அதிக அளவு ஆர்வம் காட்டுவது மட்டுமில்லாமல் இவர் நடித்த பல்வேறு திரைப்படங்களும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.