தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா இவர் பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
இவ்வாறு பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களுடைய திருமணம் தற்போது சில பல காரணங்களின் மூலமாக தற்போது விவாகரத்தில் வந்து முடிவடைந்துவிட்டது இந்நிலையில் நாளுக்கு நாள் சமந்தா மற்றும் நாகசைதன்யா விவாகரத்து பற்றிய பேச்சு அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.
இந்நிலையில் சமந்தாவின் மாமனார் நாகார்ஜுனா அவர்கள் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி கொடுத்த பொழுது சமந்தா மிக விரைவாக எங்களுடைய குடும்பத்துடன் இணைந்து விட்டார் அதுமட்டுமில்லாமல் எங்கள் அனைவரையும் மிக நன்றாகவும் பார்த்துக் கொண்டார்.
மேலும் நடிகை சமந்தா என்னுடைய மனைவிக்கு மருமகளாக இல்லாமல் மகள் போன்றுதான் இருந்து வந்தார் இவ்வாறு என்னுடைய மகனும் மருமகளும் பிரியும் நிலை ஒன்று வரும் என்பதை நாங்கள் கனவில் கூட நினைத்து பார்க்க முடியவில்லை.
இவ்வாறு நடந்த செயல் எங்கள் குடும்பத்திற்கு வேதனையை உண்டாக்கியது மட்டுமில்லாமல் பல்வேறு மனக் கஷ்டங்களையும் ஒன்று படுத்தி விட்டது. இருவருக்குள் யாரேனும் ஒருவர் விட்டுக் கொடுத்து இருந்தால் இந்த பிரச்சனை எந்த அளவிற்கு சென்று இருக்காது.
என்னதான் இவர்களுக்குள் பிரச்சினை நடந்தாலும் இன்னும் என்னுடைய மகள் மாதிரிதான் நான் சமந்தாவை பார்க்கிறேன் ஆகையால் சமந்தா தன்னுடைய சினிமா கேரியரில் இன்னும் மேலும் மேலும் வளர வேண்டும் என நான் மனப்பூர்வமாக கூறுகின்றேன் என நாகர்ஜுனா கூரியுள்ளார்.