கொரோனாவிலிருந்து நம்மை காக்க விஜய்சேதுபதியின் சூது கவ்வும் போல நாமும் இந்த 5 விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

vijay sethupathy
vijay sethupathy

Vijay sethupathi suthu kavum movie rules: விஜய் சேதுபதி 2012 இல் நடித்த மூன்று படங்களும் அவருக்கு வணிகரீதியாக பெரும் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. இவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் பீட்சா படத்தின் மூலம் பிரபலமானார். பாலாஜி தரணிதரனின்  நடுவுல கொஞ்சம் பக்கத்த கானும் படத்தில் முன்னணி கதாநாயகனாக நடித்திருந்தார். தொடர்ந்து நலன் குமாரசாமியின் சூதுகவ்வும் என்ற படத்திலும் முன்னணி கதாநாயகனாக நடித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜிகர்தண்டா, இறைவி, தர்மதுரை, காதலும் கடந்து போகும், ஆண்டவன் கட்டளை, றெக்க, கருப்பன், போன்ற படங்கள் மூலம் பிரபலமானார். அவரின் இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளார்.

சூது கவ்வும் படத்தில் விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், சிம்ஹா, கருணாகரன், ராதாரவி, மற்றும் எம்எஸ் பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி சின்ன சின்ன திருட்டு வேலை செய்து வருவார். இவருடன் மூன்று இளைஞர்கள் சேர்ந்து அமைச்சரின் மகனை கடத்த திட்டமிடுகின்றனர்.இவர்கள் திருடவதற்ககென சில விதிமுறைகளை வைத்திருப்பார்கள். அதுபோல கொரோனா வைரசை கட்டுபடுத்துவதற்கென சில விதி முறைகளை பின் பற்ற வேண்டும்.

இதோ அந்த விதிமுறைகள்:

1.ஆணியே புடுங்க வேணாம்: நாம் எவ்வளவு பெரிய வேலையில் இருந்தாலும் எந்த வேலையும் செய்யாமல் சோம்பேறியாக மட்டும் இருத்தல் வேண்டும். ஏனென்றால் கொரோனா நம் எல்லாரையும் விட அதிகமான பொறாமை வெறி குணங்கள் கொண்டது.

2.சோத்தோட சண்டை போடாதே: இந்த சூழ்நிலையில் கிடைத்ததை உண்டு இருப்பதை மற்றவருக்கு பகிர வேண்டும். இது தான் வேணும் என்று அடம் பிடிக்கக்கூடாது.

3.படம் பார்த்து கதை சொல்: படம் பார்க்க இது போன்ற நேரம் கிடைக்காது. வீட்டிலிருந்து எவ்வளவு படம் பார்க்க முடியுமா பார்க்கலாம், ஓவியம் வரைவது என கலை திறனை வளர்த்துக்கொள்ளலாம்.

4.சுத்தம் சூப்பர் மேன் ஆக்கும்: சுத்தமாகக் குளித்து, துணி துவைத்து, வீடு துடைத்து பத்திரமாக வீட்டுக்குல்லே இருக்க வேண்டும்.

5.வீரம் அறவே கூடாது: கொரோனாவை மெத்தனமாக நினைத்தால் அல்பமாக இழப்பின் அட்ரஸை நீங்களே போய் வாங்குவதற்கு சமம். கொரோனா வைரஸ்னாவே கெத்து தான். அது மேல பயம் இருக்கணும். வீரம் அறவே கூடாது.