Actor Sivakarthikeyan we love doctors# video : சினிமாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் சின்னத்திரையில் தன் திறமையை வெளிகாட்டி அதன் மூலம் வெள்ளித்திரையில் கால் தடம் பதித்தவர் என்பதை அனைவரும் அறிந்ததே.இவர் கதாநாயகனாக மெரினா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இவர் முழுக்க முழுக்க தன் திறமையாலும் விடாமுயற்சியாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். இவரது தயாரிப்பில் கனா மற்றும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா போன்ற படங்கள் வெளியாகின.மேலும் இவர் கொரோனா வைரஸ்காக முதன்முதலில் பெப்சி அமைப்பிற்கு நன்கொடை கொடுத்தார். அவரைத் தொடர்ந்து மற்ற நடிகர்களும் சி எம், பி எம், பெப்சி போன்ற அனைத்திற்கும் நன்கொடை கொடுத்தனர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
இதனைத்தொடரந்து தற்போது இவர் கொரோனா வைரஸிற்காக தன் உயிரையும் பொருட்படுத்தாமல் உழைக்கும் மனித கடவுளான மருத்துவர்களுக்காக வி லவ் டாக்டர்ஸ் என்ற ஹஷ்டாக் ஒன்றை உருவாக்கியுள்ளார். மேலும் அவர் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்திற்காக வருந்தி உள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ.