தமிழ் சினிமா உலகில் போட்டிகள் தொடர்ந்து நீடித்துக் கொண்டே தான் இருக்கும் அந்த வகையில் எம்ஜிஆர் சிவாஜி, ரஜினி கமல் இப்பொழுது அஜித் விஜய் இருவரும் தொடர்ந்து பல தடவை நேருக்கு நேர் படங்களின் மூலம் மோதி உள்ளனர் இருப்பினும் கடந்த எட்டு வருடங்களுக்குப் பிறகு அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு அஜித்தின் துணிவு விஜயின் வாரிசு..
ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே தேதியில் மோத இருப்பதால் இந்த ரேஸில் யார் ஜெயிப்பார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்களும் மக்களும் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். அஜித் துணிவு திரைப்படத்தில் நெகட்டிவ் ரோலில் செம்ம மாஸ் ஆக நடித்துள்ளார் இந்த படம் முழுக்க முழுக்க அயோக்கியர்களின் ஆட்டமாக இருக்கும் என ஹச் வினோத் கூறி உள்ளார்
மறுபக்கம் விஜயின் வாரிசு திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு சென்டிமென்ட் திரைப்படமாக உருவாகியுள்ளது இதில் விஜய் மிகப்பெரிய ஒரு கோடீஸ்வரராக நடித்திருக்கிறார். அதே சமயம் இந்த படத்தில் மாஸ் ஆக்சன் காமெடி என அனைத்தும் இடம்பெற்று இருப்பதாக சொல்லப்படுகிறது இரண்டு படங்களும் வெளிவருவதற்கு முன்பாகவே அடுத்தடுத்த அப்டேட்டுகளை கொடுத்து போட்டி போட்டு வருகிறது
இருப்பினும் அந்த போட்டி அதிகரித்துக் கொண்டே இருக்கிறது ஆம் அண்மையில் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு பேசியது சர்ச்சையாக வெடித்துள்ளது. தளபதி விஜய் தான் தமிழ்நாட்டில் நம்பர் ஒன் ஹீரோ விஜய்யை விட மார்க்கெட் வேல்யூ அஜித்திற்கு கம்மியாக இருக்கிறது என பேசினார் மேலும் வாரிசு துணிவு படத்திற்கு சமமான தியேட்டர்கள் கொடுக்கக் கூடாது வாரிசு படத்திற்கு கூடுதலாக 50 தியேட்டர்கள் வேண்டும் இது குறித்து உதயநிதி ஸ்டாலின் உடன் பேச போகிறேன் என பேசி இருந்தார்.
இதற்கு அஜித் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வந்த நிலையில் தற்போது சினிமா பரபலங்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர் அந்த வகையில் திருப்பூர் சுப்ரமணியம் அளித்த பேட்டி ஒன்றில் சொன்னது என்னவென்றால்.. யார் நம்பர் ஒன் ஹீரோ என்பது எங்களுக்கு தெரியாதா.. இங்கே கதைதான் ஸ்டார். எந்தப் படத்தின் கதை நன்றாக இருக்கிறதோ அதுதான் ஓடும்.
வசூலை வைத்து ஸ்டார் என சொன்னால் வசூலில் விக்ரம் தான் அப்படி என்றால் கமல்தான் சூப்பர் ஸ்டார். எல்லா நடிகர்களுக்கும் அந்தந்த காலத்தில் குறிப்பிட்ட படங்கள் வரும். கதை நன்றாக இருந்தால் மட்டுமே அது நடக்கும். இரண்டு நடிகர்களுமே சம அளவில் தான் தியேட்டர் கிடைக்கும். நான்கு நாட்கள் கழித்து திங்கள் கிழமை தான் தியேட்டர் எண்ணிக்கை மாற்றம் ஏற்படும் எனக் கூறினார்.