தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர் நடிகர் விஜய் இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள எண்ணூரில் நடைபெற்று வருகிறது.
பீஸ்ட் படத்தின் ரிலீஸ்க்கு முன்பாகவே தெலுங்கு இயக்குனர் வம்சி அவர்கள் தளபதி 66 படத்தில் விஜய் நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து வருகிறார்.
இன்நிலையில் வாரிசு தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது. மேலும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் அவர்கள் குடும்ப செண்டிமெண்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
தற்போது வாரிசு படத்தின் சூட்டிங் சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்த நிலையில் தற்போது எண்ணூரில் நடைபெற்று வருகிறது. இந்த படம் துவங்கியதில் இருந்து படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் லீக் ஆகி வருகிறது.
மேலும் வாரிசு படப்பிடிப்பு தற்போது எண்ணூரில் நடைபெற்ற வருகிறது அதனை அறிந்த விஜய் ரசிகர்கள் ஏராளமானோர் ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு குவிய தொடங்கினர் அப்போது ரசிகர்கள் விஜயை பார்க்க முற்பட்ட போது போலீசார் அவர்களை தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் நாங்கள் இவ்வளவு பண்றது எதற்காக தளபதியை ஒரு தடவையாவது பார்க்க தானே இப்படி பண்ணினால் எங்களுக்கு தளபதியே தேவை இல்லை சூர்யா, ரஜினி வந்தால் மட்டும் அவரது ரசிகர்களை பார்க்க அனுமதிக்கிறீங்க விஜய் வந்தால் மட்டும் இப்படி பண்றீங்க.
எங்க கிட்ட வரக்கூடியது தேவை இல்லை வாசலில் வந்து கை காட்டினாலே எங்களுக்கு சந்தோசம் தான் ஆனால் அது கூட செய்யலன்னா எங்களுக்கு தளபதியைத் தேவையில்லை என்ற ஹாஸ்டல் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்த நிலையில் வாரிசு படுத்தினை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய பட குழு திட்டம் திட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.