பிரபல விஜய் டிவியில் பல சீரியல்களில் ரசிகர் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்று வருகிறது. அந்தவகையில் ஒட்டு மொத்த குடும்ப இல்லத்தரசிகள் மற்றும் இளைஞர்களின் மனதை வெகுவாக கவர்ந்த சீரியல் பகல் நிலவு. இந்த சீரியலின் மூலம் பிரபலமடைந்த அவர்கள் சையத் அன்வர் மற்றும் சமீர ஷெரீஃப்.
இந்த சீரியலில் சக்தி பிரபாகரன் என்ற கேரக்டரில் மிகவும் ரொமான்டிக்கான காட்சியில் நடித்து இளசுகளின் மத்தியில் பிரபலம் அடைந்தார்கள். இதன் மூலம் இவர்களுக்கிடையில் காதல் மலர்ந்ததால் இருவரும் நீண்ட வருடங்களாக காதலித்து வந்தார்கள். பிறகு 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.
இந்நிலையில் தற்பொழுது உள்ள பல நடிகைகள் தங்களது கணவருடன் இணைந்து புதிய யூட்யூப் சேனல் ஒன்றை தங்களுக்கு என்று வைத்துள்ளார்கள். அந்த வகையில் இவர்களும் சொந்த யூடியூப் சேனல் ஒன்றை வைத்துள்ளார்கள். அதில் தொடர்ந்து பல வீடியோக்கள் வெளியீடு ரசிகர்களிடம் பகிர்ந்து வருகிறார்கள்.
அந்த வகையில் நாம் இனி கணவர் மனைவி கிடையாது என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது இவர்களுக்கு விரைவில் குழந்தை பிறக்க உள்ளதாம் உள்ளதாம் இனிமே நாம் இருவரும் பெற்றோர்கள் எல்லா உறவுக்கும் ஒரு முடிவு செய்கிறது என்று கூறியுள்ளார்கள்.
இதனை அறிந்த ரசிகர்கள் சையத் அன்வர் மற்றும் சமீரா ஷெரிஃப்க்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். ஆனால் அதற்கு ஏன் இப்படி ஒரு டைட்டிலை வைத்துள்ளீர்கள் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் சமீரா ஷெரிஃப் தெலுங்கில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அதோடு சில படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதோட சையத் அன்வர் தமிழில் பல சீரியல்களில் நடித்துள்ளார். அதேபோல் சில சீரியல்களையும் தயாரித்துள்ளார்.
ஆனால் இருவரும் திருமணத்திற்கு பிறகு பெரிதாக தமிழ் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதில்லை. இறுதியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை என்ற நிகழ்ச்சியில் இருவரும் இணைந்து பங்கு பெற்று வந்தார்கள்.