எத்தனை கோடி கேட்டாலும் கொடுக்க நாங்கள் தயார்..! தெலுங்கில் உச்சத்திற்கு சென்ற நடிகர் சத்யராஜ்..!

sathyaraj-2
sathyaraj-2

தமிழ் சினிமாவில் தனது பேச்சு திறமையின் மூலம் உச்சத்திற்கு சென்றவர் தான் நடிகர் சத்யராஜ் இவர் திரைப்படங்களில் ஹீரோவாக நடிப்பது மட்டும் இல்லாமல் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதிலும் குணச்சித்திர வேடத்தில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் அந்த காலகட்டம் முதல் இந்த காலகட்டம் வரை ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார். இந்நிலையில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் சத்யராஜ் சமீபத்தில் தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறந்து வருகிறார்.

இந்நிலையில் தமிழ் சினிமாவை காட்டிலும் அவருக்கு தெலுங்கு பக்கம் அதிக அளவு வாய்ப்புகள் வந்து கொண்டே இருப்பது மட்டுமில்லாமல் சமீபத்தில் பிரபாஸ் பூஜா ஹெக்டே நடித்துவரும் ராதே ஷ்யாம்  என்ற திரைப்படத்தில் கூட சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் நடிகர் சத்யராஜ் இந்த திரைப் படத்தில் நடிப்பதற்காக சுமார் 2 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.  மேலும் அவர் இரண்டு கோடி மட்டுமின்றி மேலும் எவ்வளவு சம்பளம் கேட்க நினைக்கிறாரோ அந்த அளவிற்கு தெலுங்கு சினிமா சம்பளம் கொடுக்க தயாராக உள்ளதாம்.

இவர் தெலுங்கில் அவர் கொடிகட்டிப் பறப்பதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் பாகுபலி திரைப்படம் தான் காரணம். அந்த வகையில் இவர் பாகுபலி திரைப்படத்தில் கட்டப்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்தது இன்றும் ரசிகர்களால் மறக்க முடியாத கதாபாத்திரமாக அமைந்துவிட்டது.

அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் நடிகர் சத்யராஜ் ஷாருக்கான் நடிப்பில் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் என்ற திரைப் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இந்தி சினிமாவிலும் தன்னுடைய கால் தடத்தை பதித்து விட்டார்.

மேலும் நடிகர் சத்யராஜ் சாமிபத்தில் தமிழ் சினிமாவில் பார்ட்டி காக்கி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.