Wayanad Landslide Sponsored Film Celebrities: கேரளாவில் உள்ள வயநாட்டில் கடந்த 30ஆம் தேதி ஏற்பட்ட மண் சரிவு காரணமாக தற்பொழுது வரையிலும் 333 பேர் வரை உயிரிழந்ததாக கூறப்படுகிறது இதனை அடுத்து தொடர்ந்து நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தியாவின் அரசியல் கட்சி தலைவர்களில் இருந்து அமெரிக்க அதிபர் வரை பலரும் இந்த சம்பவத்திற்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இதனை அடுத்து கேரள மாநில அரசு நிவாரண நிதி உதவி கேட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது எனவே இந்திய சினிமாவில் ஏராளமான நடிகர்கள் தங்களால் முடிந்த நிவாரண உதவிகளை அளித்து வருகின்றனர். அதன்படி தமிழ் திரையுலகை சேர்ந்த பலரும் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது அது குறித்து பார்க்கலாம்.
தமிழ் திரைவுலகில் முதல் ஆளாக நடிகர் விக்ரம் கேரள மண் சரிவு பேரிடருக்கு 20 லட்சம் ரூபாய் நன்கொடையாக கொடுத்துள்ளார். இவரைத் தொடர்ந்து தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்து ரசிகர்களுக்கு பிடித்த ஜோடியாக இருக்கும் சூர்யா-ஜோதிகா இருவரும் தற்பொழுது மும்பைக்கு குடி பெயர்ந்து விட்டனர். இந்நிலையில் சூர்யா தனது குடும்பத்தினர்களுடன் சேர்ந்து அறம் என்னும் தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார் இந்நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்து ரூபாய் 50 லட்சம் நன்கொடையாக அளித்துள்ளார்கள்.
அதேபோல் தமிழ் திரைவுலகின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா கேரளாவைச் சேர்ந்தவர் மலையாள திரைப்படங்களில் நடித்து வந்த இவர் பிறகுதான் தமிழ் சினிமாவில் நடிக்க தொடர்ந்தார். இவரும் தனது கணவர் விக்னேஷ் அவனுடன் இணைந்து கேரளா அரசுக்கு ரூபாய் 20 லட்சம் நன்கொடையாக அளித்துள்ளார்.
மலையாளத்தில் கலக்கி வரும் மலையாள நடிகர் மம்முட்டியும் அவரது மகன் துல்கர் சல்மான் இருவரும் சேர்ந்து சுமார் 235 லட்சம் நன்கொடையாக கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து இன்னும் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.
மலையாளம், தமிழ் என ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்திருக்கும் நடிகர் பகத் பாஷில் தனது நண்பருடன் இணைந்து சுமார் 29 லட்சத்தை கேரளா அரசுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். அதேபோல் நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது சார்பில் 25 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.