தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளவர் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் தொடர்ந்து நல்ல நல்ல படங்களை கொடுத்து வருகிறார் அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த டாக்டர், டான் ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாக 100 கோடிக்கு மேல் அள்ளி புதிய சாதனை படைத்திருக்கிறது.
அடுத்ததாக இவரது கையில் பல்வேறு திரைப்படங்கள் இருக்கின்றன அதில் முதலாவதுதாக இவர் நடித்த பிரின்ஸ் திரைப்படம் வருகின்ற அக்டோபர் 21ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது இந்த படத்தை அனுதீப் இயக்கியுள்ளார் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்து சத்யராஜ்..
மற்றும் மரியா, கங்கை அமரன் போன்ற பல முன்னணி நட்சத்திர நடிகர், நடிகைகள் நடித்திருக்கின்றனர். இந்த படம் வெற்றி பெறும் பட்சத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஹார்ட்ரிக் வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் நாளை டிரைலர் வெளியாக இருக்கிறது.
அதற்கு முன்பாக நடிகர் சிவகார்த்திகேயன் பேசிய வீடியோ ஒன்று இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது அது குறித்து தற்பொழுது விலாவாரியாக பார்ப்போம்.. சிவகார்த்திகேயன் சொல்லி உள்ளது என்னவென்றால் முதலில் நன்றி டாக்டர் மற்றும் டான் ஆகிய படங்களுக்கு நீங்கள் கொடுத்த வரவேற்பு பெரியது.
பிரின்ஸ் படம் தான் எனக்கு முதல் தீபாவளி ரிலீஸ் அதனால் பயங்கர excited ஆக இருக்கிறேன் இது ஒரு fun filled படம் அதை தாண்டி ஒரு noble thought இருக்கிறது இந்த படம் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் நீங்களும் சப்போர்ட் பண்ணுங்கள் என சிவகார்த்திகேயன் கேட்டுக் கொண்டுள்ளார் அந்த வீடியோ தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்..
#PrinceTrailer from tomorrow 😊#Prince🕊️#PrinceOnOct21st #PrinceDiwali💥@anudeepfilm @maria_ryab @musicthaman @SVCLLP @SureshProdns @ShanthiTalkies pic.twitter.com/6KTKW3luYc
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) October 8, 2022