சிரிப்பு வராதவங்க உடனே டாக்டர் திரைப்படத்தைப் பாருங்கள்..! டாக்டர் திரைப்படம் பற்றி இயக்குனர் ஷங்கரின் விமர்சனம்..!

shankar

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் சமீபத்தில் டாக்டர் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் இத் திரைப்படமானது சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளது.

இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அவர்கள்தான் இயக்கியிருந்தார் இத்திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த திரைப்படத்தை பற்றி பல்வேறு தரப்பினரும் விமர்சனங்கள் வெளியிட்டு வருகிறார்கள்.

அந்தவகையில் தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் என்று பெயர் எடுத்த இயக்குனர் சங்கர் அவர்கள் டாக்டர் திரைப்படத்தை பார்த்துவிட்டு தன்னுடைய பாராட்டை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்தவகையில் இந்த வைரஸ் தொற்றின் காரணமாக பலர் வருத்தத்தில் இருக்கும் நிலையில் இத்திரைப்படம் ஒரு சிரிப்பு மருந்தாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.

shankar-3
shankar-3

மேலும் இப்படிப்பட்ட சிறந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப் குமார் அவர்களுக்கும் தன்னுடைய பாராட்டுக்கள் என்று சங்கர் தெரிவித்தது மட்டுமல்லாமல் இவ்வாறு வெளிவந்த இத்திரைப்படத்தை குடும்பத்துடன் பார்த்து மகிழும் வகையில் உருவாக்கிய உள்ளீர்கள்.

shankar-2

அந்தவகையில் இந்த திரைப்படத்தில் இணைந்து பணியாற்றிய சிவகார்த்திகேயன் அனிருத் மற்றும் படக்குழுவினர்கள் அனைவருக்கும் தன்னுடைய வாழ்த்துக்கள் என்று ஷங்கர் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் வெகு நாள் கழித்து தியேட்டரில் படம் பார்க்க வாய்ப்பு அளித்ததற்கு நன்றி என்று கூறியது மட்டுமில்லாமல் இவ்வாறு சங்கர் பேசியதன் காரணமாக சிவகார்த்திகேயன் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார்.

shankar-1

ஏனெனில் சிவகார்த்திகேயனுக்கு மிகப் பிடித்த இயக்குனர் என்றால் அது சங்கர் தான். அந்த வகையில் இவருடைய பாராட்டு கிடைத்ததன் காரணமாக இந்த திரைப்படத்தை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது என்றும் கூறியுள்ளார்