நாளை ps2 பாக்க போறீங்களா… அப்போ இந்த ஐந்து விஷயத்தை தெரிஞ்சுக்கோங்க.! செமசூப்பரான தகவல்…

ps2
ps2

மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இந்த திரைப்படத்தை இயக்க பல இயக்குனர்கள் ஆசைப்பட்டார்கள், ஆனால் மணிரத்தினரின் மூலம் தான் நிறைவேறியது இந்த திரைப்படத்தினை இரண்டு பாகமாக மணிரத்தினம் இயக்கியுள்ளார்.முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது இந்த நிலையில் பொன்னியின் செல்வம் இரண்டாவது பாகம் நாளை பல திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இந்த முறை அதிக திரையரங்குகள் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது. மேலும் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் இருக்கும் மர்ம முடிச்சுகள் அனைத்தும் இரண்டாவது பாகத்தில் அவிழ்க்கப்படும் என தெரிகிறது. அதேபோல் முதல் பாகத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலை இரண்டாவது பாகம் முறியடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தினை திரையரங்கில் பார்ப்பதற்கு ஐந்து காரணங்கள் இருக்கிறது அதனை என்னவென்று இங்கே காணலாம்.

முதலில் ஆதித்ய கரிகாலனின் முடிவு : பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் ஆதித்ய கரிகாலனாக மிகவும் கம்பீரத்துடன் காணப்பட்ட சீயான் விக்ரம் தனது சகோதரர் அருண்மொழிவர்மன் ஜெயம் ரவி மறைவு செய்தியை கேட்டு சோழர்களின் தலைநகரத்திற்கு செல்கிறார். இதற்கிடையில் பாண்டியர்கள் தங்களுடைய மன்னனை கொன்றதற்காக ஆதித்ய கரிகாலனை பழிவாங்க காத்திருக்கிறார்கள். இந்த இரண்டாவது பாகத்தில் ஆதித்ய கரிகாலன் எப்படி கொல்லப்படுகிறான் அவன் தலையை யார் வெட்டப் போகிறார்கள் என்பதை இந்த பாகத்தில் கண்டிப்பாக பார்க்கலாம்.

இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ராய் : அதேபோல் ஐஸ்வர்யா ராய் பட்சன் இவர் பிஎஸ் 2 வில் மந்தாகினி மற்றும் நந்தினி என இரண்டு வேடத்தில் நடித்துள்ளார். நந்தினி முதல் பாகத்தில் அதிகமாக காணப்பட்டார் மந்தாகினியாக ps2 வில்  அதிகம் காணப்படுவார், ஏனெனில் அவரின் மர்மமான கதாபாத்திரம் பொன்னியின் செல்வம் 2 வில் வெளியாக இருக்கிறது. இரண்டு கதாபாத்திரமும் ஒன்றாக வருகிறதா என்பதை நாம் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

ராஜாவாக மாறப்போகும் ஜெயம் ரவி: முதல் பாகத்தில் ஜெயம் ரவி இறந்துவிட்டதாக அனைவரும் நம்புவார்கள் ஆனால் அதனை உடைத்தெறிந்து உயிருடன் வரப் போகிறார். இவர் மீண்டும் வருவது படத்திற்கு மிகப்பெரிய திருப்புமுனை காட்சியாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயம் ரவி தன்னுடைய மூத்த சகோதரர் ஆதித்ய கரிகாலனின் மறைவுக்குப் பிறகு சோழர்களின் மன்னராக பதவி ஏற்க இருக்கிறார் தன்னுடைய சகோதரனின் இழப்பை எப்படி ஏற்றுக் கொள்ளப் போகிறார் என்பதை பார்ப்பது மிகப்பெரிய சுவாரசியமாக இருக்கும்.

மணிரத்தினம் திரைக்கதை  : என்னதான் பொன்னியின் செல்வம் நாவலை வெளிப்படுத்தினாலும் மணிரத்தினம் தன்னுடைய அற்புதமான திரை கதையால் திரையில் சுவாரசியமாக கொண்டு வந்துள்ளார். அதேபோல் இரண்டாவது பாகமும் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமே இல்லாமல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை முன்னணி இயக்குனருக்காக  அனுபவத்துடன் ps2 வில் ஆச்சரியங்கள் நிறைந்ததாகவும் திரைக்கதையை இயக்கி இருக்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

ஏ ஆர் ரகுமான் இசை : ஏ ஆர் ரகுமான் பொன்னின் செல்வன் முதல் பாகத்திற்கு தன்னுடைய சிறந்த இசையை வழங்கினார். அதேபோல் பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகத்திற்கு முதல் பாகத்தை விட அதிகமான பாடல்களை கொண்டு படத்திற்கு வலு சேர்த்து  இருக்கிறார் அது மட்டும் இல்லாமல் தீம் மியூசிக் பேக்ரவுண்ட் மியூசிக் என பட்டையை கிளப்புவார் அதனால் வரலாறு மிக்க திரைப்படத்திற்கு உரிதான இசையை நாம் காண இருக்கிறோம்.