உனக்கான மரியாதை வரப்போகுது பார்த்து இருந்துக்கோ ஆர். கே. சுரேஷ் – மேடையில் அட்வைஸ் கொடுத்த பிரபல இயக்குனர்.

R.K. suresh
R.K. suresh

இயக்குனர் பாலா சினிமா உலகில் நாம் எதிர்பார்க்காத வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார் மேலும் பாலாவின் திரைப்படங்கள் பெரும்பாலும் வெற்றியை ருசித்து உள்ளன நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் பாலா பி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஆர்கே சுரேஷ் முதன்மை நாயகனாக வைத்து விசித்திரன் என்ற திரைப்படத்தை தயாரித்து உள்ளார்.

மலையாளத்தில் வெளியாகி இந்தியா முழுவதிலும் பாராட்டை பெற்ற ஜோசப் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ மறுஉருவாக்கம் விசித்திரன். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு வெளியிடுவதற்கு தயாரான நிலையில் உள்ளது இந்த படத்தை இயக்குனர் பாலா மிகப் பிரமாண்ட பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளார்.

மலையாளத்தில் இந்த படத்தை இயக்கிய எம் பத்மகுமார் தான் தமிழிலும் இந்த படத்தை எடுத்துள்ளார். இந்த நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் பல திரைப்பிரபலங்கள் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் கலந்து கொண்டுள்ளனர் இயக்குனர் சீனு ராமசாமி, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், நடிகர் சரவண சக்தி, வெற்றி அரசு அகாடமி நிறுவனர் ரூசோ,  தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஜாங்கிட் அவர்கள் பேசினார்.

இந்த படத்தின் வெற்றி விழாவில் தயாரிப்பாளரும், இயக்குனருமான பாலா பேசியிருந்தார் அதில் அவர் பேசும்போது வாழ்த்த வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி இந்த படத்தை ரீமேக் பண்ணலாமா என்று அப்பொழுது ஆர். கே. சுரேஷ் நான் பண்றேன் அண்ணா என்றான்.

அப்பா அதே டைரக்டரை அழைப்போம் என பத்மகுமாரை கூப்பிட்டு நீங்கள் அங்க  செய்ய முடியாததை பணம் பற்றி கவலையில்லாமல் பண்ணுங்கள் என்றேன் அவரும் மலையாள படத்தை விட இந்த படத்தை அழகாக எடுத்துள்ளார் இந்தப்படம் மூலம் சுரேஷுக்கு நல்ல மரியாதை கிடைக்கும் அதை அவன் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் படம் நன்றாக உள்ளது அனைவருக்கும் வாழ்த்துகள் என கூறினார்.