நடிப்பிற்கு பெயர் போன உலகநாயகன் கமலஹாசன் சினிமா தான் வாழ்கை என நினைத்துக் ஓடிக்கொண்டிருந்த இவர் அண்மைக் காலமாக சினிமாவையும் தாண்டி அரசியல் பிரவேசம், வியாபாரம் என்ன பலவற்றில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். மேலும் சினிமாவில் தயாரிப்பாளராகவும் களமிறங்கினார். இருப்பின்னும் சினிமா இவரை விடாமல் ஒரு பக்கம் துரத்திக் கொண்டுதான் வந்தது.
கடந்த நான்கு வருடங்கள் கழித்து லோகேஷ் கனகராஜ் சொன்ன விக்ரம் படத்தின் கதை கமலுக்கு ரொம்ப பிடித்து போகவே துணிச்சலாக அந்த படத்தில் நடிக்க செய்தார். மேலும் கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் படத்தை தயாரித்து.
படம் ஜூன் 3 ம் தேதியை திரையரங்கில் வெளிவந்தது. படம் ரசிக்கும்படி இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று சூப்பராக ஓடியது அதன் காரணமாக விக்ரம் திரைப்படம் 400 கோடிக்கு மேல் வசூல் அள்ளி புதிய சாதனை படைத்தது. விக்ரம் படத்தால் உலக நாயகன் கமலஹாசன் தற்போது செம்ம சந்தோஷத்தில் இருக்கிறார் மேலும் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.
விக்ரம் படத்தை தொடர்ந்து கமலஹாசன் கையில் சபாஷ் நாயுடு, இந்தியன் 2, தேவர்மகன் 2 ஆகிய திரைப்படங்கள் மீண்டும் எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் விக்ரம் படத்தின் வெற்றியால் படத்தில் பணியாற்றிய பலருக்கும் பரிசு பொருள்களை கொடுத்தார் அந்த வகையில் விக்ரம் படத்தின் கடைசியில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் வந்து போன சூர்யாவுக்கு..
ரோலக்ஸ் வாட்ச்சை பரிசாக கொடுத்து அசத்தினார். இந்த வாட்ச்சை கமல் பயன்படுத்தியது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்த வாட்சை போட்டுக்கொண்டு தனது படங்களில் நடித்துள்ளார். மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இந்த வாட்சை போட்டுக்கொண்டு நடித்துள்ளார். அதன் புகைப்படம் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.