சூர்யாவுக்கு வாட்ச், லோகேஷ்க்கு கார் உங்களுக்கு என்ன..? அனிருத்திடம் கேள்வி எழுப்பிய தொகுப்பாளர்..!

aniruth-1
aniruth-1

தமிழ் சினிமாவில் உலக நாயகன் என்று போற்றப்படும் நடிகர்தான் கமலஹாசன் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவ்வாறு உருவான இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு மட்டுமில்லாமல் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.

அந்த வகையில் இந்த திரைப்படமானது உலக அளவில் 300 கோடிக்கும் மேலாக வசூல் செய்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்நிலையில் இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் நடிகர் கமலஹாசன் அவர்கள் இந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் அவர்களுக்கு புதிய கார் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார்.

அதேபோல இந்த திரைப்படத்தில் தரோலாக் சேர்ந்த கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை பரிசாக கொடுத்து கௌரவித்தனர். மேலும் இந்த திரைப்படத்தில் பணியாற்றிய பல்வேறு பிரபல நடிகர் நடிகைகளுக்கு பல பரிசுகளை நடிகர் கமல்ஹாசன் படத்துக்கு அவர் வைத்துள்ளார்.

இந்நிலையில் இந்த விக்ரம் திரைப்படத்தின் மலையாள வெற்றி விழாவில் இயக்குனர் லோகேஷ் மற்றும் அனிருத் ஆகிய இருவரும் கலந்து கொண்டார்கள். அப்பொழுது தொகுப்பாளர் ஒருவர்  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் காரை பரிசாக கொடுத்துள்ளார். கமல் அதேபோல சூரியாவுக்கு வாட்ச் கொடுத்துள்ளார் இந்நிலையில் இசையமைப்பாளர் உங்களுக்கு என்ன கொடுத்தார் என அனிருத்திடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்வாறு அந்த கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் நமது இசை அமைப்பாளர் அனிருத் அவர்கள் எனக்கு விக்ரம் திரைப் படத்தில் இசையமைக்கும் வாய்ப்பு கொடுத்துள்ளார் என அனிருத் கூறியது மட்டுமில்லாமல் அதுவே எனக்கு மிகப்பெரிய பரிசு என அனிருத் பொதுமேடையில் கூறியுள்ளார்.