இக்கட்டான நிலையில் மாட்டிய இந்திய அணி.. தனி ஒருவனாக போராடி மீட்ட வாஷிங்டன் சுந்தர் – புகழ்ந்து தள்ளும் கிரிக்கெட் உலகம்.

SUNDAR-
SUNDAR-

இந்திய அணி தொடர்ந்து ஆசிய கோப்பை, உலக கோப்பை போன்ற பெரிய தொடர்களை ஜெயிக்க முடியாமல் தட்டுத்தடு மாறியது இதனை எடுத்து இந்திய அணி பல சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுத்து இளம் வீரர்களை நியூசிலாந்துக்கு அனுப்பியது 20 ஓவர் கோப்பையை இந்திய அணி கைப்பற்றினாலும் ஒரு நாள் தொடரில் இந்திய அணி கோப்பையை தவற விட்டது.

முதல் போட்டியில் நியூசிலாந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை ருசித்தது இரண்டாவது போட்டி மழையின் காரணமாக நடக்கவில்லை மூன்றாவது போட்டி கோப்பையை நிர்ணயம் போட்டியாக இருந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தவான் 28 ரண்களுக்கும் கில் 13 ரண்களுக்கும் விக்கெட்டை இழுந்தனர்.

இதனை அடுத்து களம் கண்ட ரிஷப் பந்த், சூரியகுமார் யாதவ், தீபக் ஹூடா என அனைவரும் சொற்பொருங்களில் விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் ஒரு பக்கமும்  தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் தனி ஒருவனாக விளையாடினார் இவர் 64 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார் மற்றவர்கள் சொற்பாரன்களில் வெளியேறினார்.

இதனால் இந்திய அணி 47.3 ஓவர்களில் 219 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்தது இதனை எடுத்து களம் கண்ட நியூசிலாந்து அணி ஆரம்பத்திலேயே அதிரடி ஆட்டத்தை காட்டி சூப்பர் ஆக விளையாண்டாலும் மழையின் காரணமாக ஆட்டம் ரத்து செய்யப்பட்டது இதனால் 1 – 0 என்ற கணக்கில் கோப்பையை நியூசிலாந்து கைப்பற்றியது.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் சீனியர் வீரர்கள் சரியாக ஆடாத நிலையில் வளர்ந்து வரும் வீரரான வாஷிங்டன் சுந்தர் சூழ்நிலைக்கு ஏற்ப சூப்பராக விளையாண்டது மக்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களைக் கொண்டாட வைத்தது மேலும் தொடர்ந்து அவருக்கு வாழ்த்துக்களை அனைவரும் கூறியும் வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள்.