தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா இவ்வாறு பிரபலமான நடிகை தமிழ் சினிமாவில் நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார்.
இவ்வாறு இவர் அறிமுகமான முதல் திரைப்படத்தை தொடர்ந்து நடிகை நயன்தாரா தான் நடிக்கும் திரைப்படத்தில் சிறிதளவு கூட கவர்ச்சி காட்டாமல் கட்டுக்கோப்பாகவும் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் மட்டுமே திரைப்படங்களில் நடித்து வந்தார்.
நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக கிளாமருக்கு வழிவிட்ட நடிகை நயன்தாரா தற்சமயம் கவர்ச்சியில் உச்சத்திற்கு ரசிகர்களை கொண்டு சென்றது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். இந்நிலையில் தற்போது முன்னணி நடிகை அந்தஸ்தைப் பெற்ற நமது நடிகை கவர்ச்சி கதாபாத்திரத்தை முற்றிலும் தவிர்த்து வருகிறார்.
அந்தவகையில் அவர் சமீபத்தில் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் அடக்க ஒடுக்கமாக இருப்பது மட்டுமில்லாமல் பார்ப்பதற்கு மிகவும் பொறுமையான கதாபாத்திரமே அமைந்து வருகிறது அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் நயன்தாரா கதாபாத்திரத்திற்கு முக்கியம் உள்ள திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் தன்னுடைய வாழ்நாளில் முதன் முதலாக அம்மன் வேடத்தில் நடித்து மாபெரும் ஹிட்டு கொடுத்த திரைப்படம் தான் மூக்குத்தி அம்மன் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக ஆர்ஜே பாலாஜி நடித்திருப்பார்.
இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படத்தை தொடர்ந்து நயன்தாராவை பலரும் மதிக்க ஆரம்பித்தது மட்டும் இல்லாமல் என்ற திரைப்படம் மாபெரும் ஹிட் கொடுத்தன. இந்நிலையில் இந்த திரைப்படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்தது நடிகை சுருதிஹாசன் தானாம்.
ஆனால் அவருக்கு கால்ஷீட் பிரச்சினை இருந்ததன் காரணமாக இந்த திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது பின்னர் நயன்தாராவை இந்த திரைப்படத்தில் ஒப்பந்தம் செய்துவிட்டார்கள்.