மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகி அதன் பிறகு கார்த்தியை வைத்து கைதி என்ற திரைப்படத்தை இயக்கி பிரபலமானார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். கைதி திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படத்தை இயக்கினார்.
இந்த திரைப்படத்தில் ஆரம்பத்தில் நடிகர் விஜய் அவர்கள் போதைக்கு அடிமையாக இருப்பதாக காட்டப்பட்டிருக்கும் அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படம் நடிகர் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் ஒரு முக்கியமான ஒரு திரைப்படமாக அமைந்திருக்கும் என்றே சொல்லலாம் அந்த அளவிற்கு இந்த திரைப்படம் ஒரு வெற்றி படமாக அமைந்தது.
இப்படி இருக்கும் பட்சத்தில் மாஸ்டர் படத்தில் முதலில் நடிக்க இருந்தது விஜய் இல்லையாம். அதாவது மாஸ்டர் படத்தின் கதையை முதலில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் அஜித்திடம் தான் கூறியிருக்கிறார். ஆனால் அந்த நேரத்தில் நடிகர் அஜித் அவர்கள் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்து வந்தார் இதனால் மாஸ்டர் திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனது.
அது மட்டுமல்லாமல் மாஸ்டர் திரைப்படத்தில் அஜித் நடித்திருந்தால் அவருக்கு சுத்தமாக செட்டாகி இருக்காது என்றும் சிலர் கருத்து கணிப்பு வைத்திருக்கின்றனர். அப்படி செட் ஆகி இருந்தால் அஜித்திற்கு இந்த திரைப்படம் ஒரு மெகா ஹிட் திரைப்படமாக அமைந்திருக்கும் எனவும் கூறி வருகிறார்கள்.
மேலும் நடிகர் விஜய் தற்போது மீண்டும் இயக்கும் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் அப்டேட் மற்றும் பிரமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலானது இதனை தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.
விரைவில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது இதனை தொடர்ந்து லியோ திரைப்படம் வருகின்ற ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சினிமாவில் இருக்கும் அனைத்து நடிகர்களுடனும் ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டும் என்று மிகத் தீவிரமாக இறங்கி வேலை பார்த்து வருகிறார். அந்த வகையில் அஜித்துடன் கூடிய விரைவில் ஒரு படம் இயக்குனர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.