vijay leo : விஜயின் வீக்னஸ் பாயிண்டை பிடித்த லோகேஷ்.! இதனால்தான் லியோ படத்துக்குள் வந்தாரா தளபதி.?

vijay leo movie
vijay leo movie

vijay leo : இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் வைத்து லியோ என்ற திரைப்படத்தை இயக்கினார் இந்த திரைப்படம் நேற்று அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியது. மேலும் திரைப்படம் வெளியாகி கலையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் முதல் நாள் வசூலில் மாபெரும் சாதனை படைத்துள்ளது.

உலகம் முழுவதும் 140 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது அது மட்டும் இல்லாமல் இந்தியாவில் 60 முதல் 66 கோடி வரை வசூல் இருக்கும் எனவும் தமிழகத்தில் 30 முதல் 35 கோடி வரை இருக்கும் எனவும் தகவல் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் விஜய் எப்படி லியோ திரைப்படத்திற்குள் வந்தார் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

லியோ திரைப்படத்தின் கதை :

சஞ்சய் தத், அர்ஜுன் இருவரும் அண்ணன் தம்பிகள் சஞ்சய் தத்துக்கு லியோ என்ற விஜய் மகனாக இருக்கிறார் அதேபோல் ஒரு சகோதரியும் இருக்கிறார் ஆனால் இரண்டு ஜாதகத்தை கொடுத்து இவர்களில் ஒருவரை பலி கொடுக்க வேண்டும் என கூற உடனே தங்கையை பலி கொடுக்க முடிவு செய்கிறார்கள் இதனால் விஜயின் தங்கையை நரபலி கொடுத்து விடுகிறார்கள் இதனால் லியோ விஜய் சுட்டு தள்ளபடுகிறார்.

ஆனால் விஜய் எப்படியோ தப்பித்து ஹிமாச்சலப் பிரதேசத்தில் பார்த்திபனாக வாழ்ந்து வருவார். ஆனால் இவர் தான் லியோ என கண்டுபிடித்து இவரை கொல்ல முயற்சி செய்கிறார்கள் ஆனால் கடைசிவரை லியோ இவர் தான் என பார்த்திபன் ஒப்புக்கொள்ள மாட்டார்.

கடைசியில் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் இருவரையும் லியோ விஜய் கொன்றுவிட்டு பிறகுதான் நான் தான் லியோ என்பதே கூறுவார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு பொருத்தமான வில்லன் நடிகராக அர்ஜுன் இருந்திருந்தாலும் அவர் படம் முழுக்க வரவில்லை. அதேபோல் சஞ்சய் தத் என்ற மிகப்பெரிய வில்லனை வைத்து ஏதோ போங்காட்டம் ஆடியுள்ளார் லோகேஷ்.

விஜய்யை லோகேஷ்  தங்கச்சி சென்டிமென்ட் கதையை கூறிதான் லோகேஷ் மடக்கி போட்டு இருப்பார் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஏனென்றால் ரியல் லைஃபில் விஜய் தன்னுடைய தங்கையை இழந்து தவித்து வருகிறார் என்பதை தெரிந்து கொண்டு அது போல் ஒரு கதையை உருவாக்கி விஜய் சென்டிமென்டால் தாக்கியுள்ளார் லோகேஷ் இதனால் தான் விஜய் லியோ திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.