செக்கச்சிவந்த வானம் திரைப்படத்தில் அருண் விஜய் கதாபாத்திரத்தில் முதலில் இந்த நடிகர் நடிக்க இருந்தாரா.? இத்தனை நாளா இது தெரியாம போச்சே.!

arun-vijay
arun-vijay

தனது திரைப்படங்கள் என்ன தான் நிறைய தோல்விகளை கண்டாலும் அதை எல்லாம் சலிப்பாக எடுத்துக் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் முயற்சித்து தற்போது தனது திரைப்படங்களைப் பார்ப்பதற்கே ஒரு தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் இயக்குனர் தான் மணிரத்தினம் இவர் தொடர்ச்சியாக பல தோல்வி திரைப்படங்களை கொடுத்தாலும் ஒரு சில திரைப்படங்களில் இவர் யார் என்பதை புரிய வைக்கிறார்.

ரசிகர்கள் பலரும் மணிரத்னம் மீண்டும் சினிமாவில் பல திரைப்படங்களை எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என பலரும் கூறி வந்த வகையில் பல திரைப்படங்கள் தோல்வி அடைந்தாலும் செக்கச்சிவந்த வானம் என்ற திரைப்படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றியை கண்டுள்ளார்.

பொதுவாகவே மணிரத்னம் இயக்கும் திரைப்படங்கள் விருதுகள் மட்டுமே பெற்று வரும் ஆனால் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்யாது என மணிரத்னத்தை பலரும் கிண்டல் செய்தார்கள் என்பது நமக்கு தெரிந்ததுதான் அதையெல்லாம் காதிலேயே வாங்காமல் மணிரத்தினம் செக்கச்சிவந்த வானம் என்ற திரைப்படத்தை சரியான முறையில் இயக்கி இருப்பார்.

இந்தத் திரைப்படம் ஒரு கேங்க்ஸ்டர் திரைப்படமாக அமைந்திருக்கும் அதிலும் குறிப்பாக இதில் நடித்த அருண் விஜய்,விஜய் சேதுபதி,சிம்பு போன்ற பலரும் இந்தத் திரைப்படங்கள் மூலம் புகழ் பெற்று விளங்கினார்கள் அதிலும் குறிப்பாக அருண்விஜய் நடித்த கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது அந்த அளவிற்கு அவர் நடித்து இருப்பார் இந்த திரைப்படம் வெளியான பொழுது தமிழ்நாட்டில் மட்டும் 50 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தை பற்றி ஒரு தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது அதாவது அருண்விஜய் நடித்த தியாகு கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தமாகி பின் ஒரு சில காரணங்கள் குறித்து நடிக்காமல் போன நடிகர் தான் பகத் பாசில் இவர்தான் அருண்விஜய் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தாராம் ஆனால் ஒரு சில காரணங்கள் குறித்து இவர் அந்த திரைப்படத்தை நழுவ விட்டு விட்டாராம்.

fahadh faasil
fahadh faasil

அதுமட்டுமல்லாமல் இவர் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தால் அட்டகாசமாக இருக்கும் என ரசிகர்கள் பலரும் கூறி வருவது மட்டுமல்லாமல் தற்போது இந்த தகவலை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.