அஜித்தை மறைமுகமாக கிண்டல் செய்வதற்காக தான் அந்த சீன் வைக்கப்பட்டதா.! பல வருடம் கழித்து விஜய் பட இயக்குனர் விளக்கம்.!

ajith-vijay
ajith-vijay

தமிழ் சினிமாவில் 1998 ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியாகிய பிரியமுடன் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வின்சென்ட் செல்வா இவர் அதனைத் தொடர்ந்து விஜயின் யூத் திரைப்படத்தையும் இயக்கினார். இந்த திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது.

இந்த நிலையில் வின்சென்ட் செல்வா சமீபத்தில் பிரபல இணையதள நேர்காணலில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார் அதில் யூத் படத்தில் அஜித்தை மறைமுகமாக கேலி செய்வதுபோல் இருப்பதாக கூறப்படுகிறது அந்தக் குறிப்பிட்ட சீன் திட்டமிட்டு வைக்கப்பட்டதா என கேள்வி எழுப்பினார்கள் அதற்கு பதிலளித்த வின்சென்ட் செல்வா.

அவர் கூறியதாவது பொதுவாக யாரையும் காயப்படுத்த விஜய் சார் விரும்பமாட்டார் சூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கும்பொழுது வேறு ஏதாவது நடிகரைப் பற்றி கிண்டல் செய்தால் கூட விஜய் சார் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்.

இந்நிலையில் யூத் திரைப்படத்தில் வில்லன் அது அது என்று சொல்ல அதற்கு விஜய் சார் எதிராக எது என்று கேட்கும் காட்சியை எடுக்கப்பட்டிருக்கும் அதேபோல ரெட் திரைப்படத்தில் அஜித் சார் அப்படி பேசுவார் என்பது எங்களுக்கு தெரியாது. யூத் படத்தை பார்த்துவிட்டு யாரோ ஒருவர் எனக்கு தொலைபேசியில் அழைத்து இதைக் கூறினார் உடனே விஜய் சாருக்கு நான் இதை கூறினேன்.

அதற்கு விஜய் சார் நாம் அப்படி நினைத்து எதுவும் பண்ணலையே செல்வா எங்க வருது அந்த சீன் என என்னிடம் கேட்டார் இதை விஜய் சார் அவர்களுக்கும் எந்த காட்சி என்று நினைவிலில்லை அதேபோல் மற்ற படங்களில் வந்தது பற்றி எனக்கு தெரியவில்லை ஆனால் என் படத்தில் தெரியாமல் தான் நடந்தது இந்த மாதிரியான விஷயங்களை நான் விரும்பமாட்டேன் விஜய்யும் விரும்ப மாட்டார் என வின்சென்ட் செல்வா கூறினார்.