அஜித்திற்காக போடப்பட்ட மியூசிக் தான் ரஜினியின் பாட்ஷா படத்தில் பயன்படுத்தப்பட்டதா.? இந்த கதை உங்களுக்கு தெரியுமா.?

baasha
baasha

Baashha : இசையமைப்பாளர் தேவா தமிழ் சினிமாவில் தேனிசை தென்றல் என்ற அடைமொழிக்கு சொந்தக்காரர் இவர் தமிழில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார் அதிலும் கானா பாடல் என்றாலே தேவா மியூசிக் தான் அந்த அளவு புகழின் உச்சத்தில் இருந்தார் தேவா ரசிகர்களை அதிகமாக கவர்ந்தது கானா பாடல் 90ஸ் கிட்ஸ் ரசிகர்களின் ஃபேவரட் பாடல் என்றால் அது தேவா பாடல் ஆக தான் இருக்கும்.

இளையராஜா ஏ ஆர் ரகுமான் இருவரும் கொடி கட்டி பறந்த பொழுது தேவாவும் அவர்களுக்கு போட்டியாக வளர்ந்து கொண்டு இருந்தார் அந்த சமயத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த ரஜினி கமல் வளர்ந்து வரும் ஹீரோக்களாக இருந்த விஜய், அஜித், சூர்யா, பிரசாந்த் என அனைத்து திரைப்படங்களுக்கும் தேவா இசையமைத்துக் கொண்டிருந்தார். தேவாவின் இசை ஒவ்வொரு பாடலுக்கும் வித்தியாசமாக இருக்கும் அதனால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ஹிட் அடித்தது.

தேவா முதன்முதலாக ரஜினியின் அண்ணாமலை திரைப்படத்திற்கு தான் இசையமைத்திருந்தார் அந்த சமயத்தில் அண்ணாமலை திரைப்படத்தின் தயாரிப்பாளர் பாலச்சந்தருக்கும் இளையராஜாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது அதனால் தான் இந்த திரைப்படத்தில் தேவா உள்ளே இழுக்கப்பட்டார். இளையராஜா போல் தேவா எனக்கு ஹிட் கொடுப்பாரா என மிகப் பெரிய சந்தேகத்தில் இருந்தார் ரஜினி.

ஆனால் ரஜினியின் சந்தேகத்தை சுக்குநூறாக உடைத்தார் தேவா அண்ணாமலை படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானது அது மட்டும் இல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினி என்ற பெயரோடு வரும்தீம் மியூசிக் தான் இன்று வரை ரஜினியின் பல படங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அண்ணாமலை திரைப்படத்தின் பாடல் மாபெரும் ஹிட் அடித்ததால் ரஜினி அவர்கள் தங்க சங்கிலியை பரிசாக தேவா அவர்களுக்கு கொடுத்தார்.

இதனை தொடர்ந்து ரஜினியின் பல திரைப்படங்களுக்கு தேவா தான் கமிட்டானார் அந்த வகையில் பாட்ஷா, அருணாச்சலம் என பல திரைப்படங்களுக்கு மியூசிக் போட்டார் தன்னுடைய முழு உழைப்பையும் ஒவ்வொரு படத்திற்கும் வெளிப்படுத்தினார் அந்த வகையில் வசந்த் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான திரைப்படம் தான் ஆசை இந்த திரைப்படத்திற்காக தேவா ஒரு மியூசிக் போட்டுள்ளார் ஆனால் அந்த மியூசிக் வசந்த் அவர்களுக்கு பிடிக்கவில்லை அதன் பிறகு வேற டியூன் போட்டுக் கொடுத்தார்.

ஆனால் தேவா அந்த டியூனை பாஷா திரைப்படத்தில் சுரேஷ் கிருஷ்ணா அவர்களிடம் போட்டு காட்டினார் சுரேஷ் கிருஷ்ணாவுக்கு அந்த டியூன் பிடித்து போக பிறகு தான் பாட்ஷா திரைப்படத்தில் ஸ்டைலு ஸ்டைலுதான் என்ற பாடல் உருவானது அந்த பாடல் இன்று வரை ரஜினியின் அடையாளமாக இருந்து வருகிறது.