சமீபத்தில் பல்வேறு மொழிகளில் வெளியான ஒரு திரைப்படம் என்றால் அது அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா என்ற திரைப்படம்தான். இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருப்பார்.
மேலும் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் பகத் பாசில் நடித்தது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை இயக்குனர் சுகுமார் அவர்கள் தான் இயக்கி உள்ளார். மேலும் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க செம்மர கடத்தலை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட திரைப்படமாகும்.
இந்நிலையில் இந்த திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் புஷ்பராஜ் என்ற கதாபாத்திரத்தில் லாரி டிரைவராக நடித்திருப்பார். இந்நிலையில் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டு அதில் முதல் பாகம் தற்போது தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என 5 மொழிகளில் டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி வெளியாகியது.
மேலும் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய பாடல் ஒன்றில் நடிகை சமந்தா நடனமாடி இருப்பார் இவ்வாறு அவர் நடனமாடிய பாடல் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளாகி விட்டது.
மேலும் புஷ்பா திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் பகத் பாஸில் ஆகிய இருவரும் கிளைமாக்ஸ் காட்சியில் சண்டை போடுவது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அந்த காட்சியில் முதன்முதலாக இருவரும் ஆடையின்றி சண்டை போடுவது போல் திட்டமிட்டிருந்தார்கள் ஆனால் ரசிகர்கள் அதை ஏற்க மாட்டார் என்ற காரணத்தினால் உடை அணிந்து கொண்டு சண்டை போட வேண்டியதாயிற்று.