தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் 2002 ஆம் ஆண்டு ”துள்ளுவதோ இளமை” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.இதை தொடர்ந்து 2003ம் ஆண்டு ”காதல் கொண்டேன்” என்ற திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார். இப்படத்திற்காக சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது. இதனை அடுத்து தனது மார்க்கெட்டை அவர் உயர்த்திக் கொண்டார். இதையடுத்து அவர் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து தனது நடிப்பை மேம்படுத்திக்கொள்ள அதிலும் குறிப்பாக திருடா திருடி புதுக்கோட்டையிலிருந்து சரவணன்,புதுப்பேட்டை, திருவிளையாடல் ஆரம்பம், பொல்லாதவன், யாரடி நீ மோகினி ஆகிய காதல் ஆக்ஷன் கலந்த படங்களை தேர்ந்தெடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.
இந்நிலையில் சமீபகாலமாக மாறுபட்ட கதைகளை தேர்ந்தெடுத்து தனது திறமையை வெளிக்காட்டி வருகிறார் தனுஷ். அந்த வகையில் 2011 ஆம் ஆண்டு ஆடுகளம் என்ற திரைப்படத்தில் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இந்திய திரைப்பட விருது மற்றும் பல விருதுகளை பெற்றார். இதன்மூலம் அவர் தமிழ் சினிமாவின் மறக்கமுடியாத ஒரு நபராக உறுப் பெற்றார். இதனை அடுத்து தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் மே மாதம் வெளியாக இருந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக தற்பொழுது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன் இவர் தனுஷுடன் இணைந்து நான்கு படங்களை எடுத்துள்ளார். அத்தகைய நான்கு படங்களும் மிக பெரிய வெற்றி பெற்றுள்ளன. இதனாலேயே தனுஷ் அவர்களுக்கு மிகப் பிடித்தமான இயக்குனராக மாறியுள்ளார் வெற்றிமாறன். வெற்றிமாறன் இயக்கிய படங்கள் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை மற்றும் அசுரன் போன்ற படங்களாகும்.
இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக டாப்சி அவர்கள் நடித்து இருப்பார். ஆனால் டாப்சிக்கு முன்னதாக ஆங்கிலோ இண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க திரிஷா அவர்கள் தான் முதலில் நடிக்க இருந்தாராம். சில பிரச்சனைகளால் திரிஷா இந்த படத்தில் இருந்து விலகினார் இதனால் தான் டாப்சிக்கு வாய்ப்பு கிடைத்தது. அத்தகைய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.