ஐஸ்வர்யா ராய் நடித்த நந்தினி கதாபாத்திரத்தில் முதன்முதலில் நடிக்க இருந்தது இவரா.? வெளிவரும் உண்மை தகவல்

aishwarya-rai

இயக்குனர் மணிரத்தினம்  திரை உலகில் பல படங்களை இயக்கி வெற்றி கண்டவர் இவர் இப்பொழுது கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுத்தார் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது இந்த படத்தை ரசிகர்களையும்..

தாண்டி சினிமா பிரபலங்கள் போட்டி போட்டுக் கொண்டு இந்த படத்தை பார்த்து வருகின்றனர். அந்த அளவிற்கு படம் சூப்பராக நேர்த்தியாக எடுக்கப்பட்டிருக்கிறது படம் தொடர்ந்து நல்ல விமர்சனத்தை பெற்று வருவதன் காரணமாக இந்த படத்தின் வசூல் ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரைகளும் அடித்து நொறுங்குகிறது.

உலகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக இந்த திரைப்படம் 370 கோடிக்கு மேல் அள்ளி இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன.வருகின்ற நாட்களிலும் எந்த ஒரு படமும் ரிலீஸ் ஆகாமல் இருப்பதால் இந்த படத்தின் வசூலை தடுக்க முடியாது என கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு சூப்பர் தகவல் கிடைத்துள்ளது.

அதாவது இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்த நந்தினி கதாபாத்திரம் மிகவும் முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில்  சூப்பராக நடித்து நல்ல பெயர் வாங்கி இருக்கிறார். ஆனால் முதலில் இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வானது அவர் கிடையாதாம் வேறு ஒரு நடிகை தான் மணிரத்தினம் செலக்ட் செய்ததாக கூறப்படுகிறது.

அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. முதலில் இயக்குனர் மணிரத்தினம் நந்தினி கதாபாத்திரத்திற்கு அனுஷ்காவை தான் தேர்வு செய்தாராம் ஆனால் அந்த படம் அப்பொழுது டிராப்பானது. படம் முன்பே உருவாகியிருந்தால் முதலில் நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யாவுக்கு பதில் அனுஷ்கா தான் நடித்திருப்பார் ஆனால் அது நடக்காமல் போனது எது எப்படியோ நந்தினி கதாபாத்திரத்தில்  ஐஸ்வர்யா ராய்  பிரமாதமாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

anushka
anushka