சன் டிவி தொலைக்காட்சியில் இப்படி ஒரு சீரியலில் நடிக்க இருந்தாரா.. மறைந்த நடிகை சௌந்தர்யா.?வியப்பில் ரசிகர்கள்.

sowundarya
sowundarya

90 காலகட்டங்களில் பல பட வாய்ப்புகளை கைப்பற்றி தொடர்ந்து வெற்றி கண்டவர் நடிகை சௌந்தர்யா இவர் பெரும்பாலும் சினிமா உலகில் பெரிய அளவுக்கு கிளாமராக நடிக்க என்ற பெயரையும் வைத்திருந்தார் இவர் ரஜினி, விஜயகாந்த்  போன்ற டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வெற்றி கண்டவர்.

அதனால் என்னவோ இவருக்கென ஒரு ரசிகர்கள் கூட்டம் கிடுகிடுவென உயர்ந்தது தொடர்ந்து வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த இவர் எதிர்பாராதவிதமாக விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இது ரசிகர்களையும் சினிமா பிரபலங்களையும் பெரிதும் ஆச்சரியப்படுத்தியது.

இவர் இறந்தது  இதுவரை மர்மமாகவே இருந்து கொண்டுதான் இருக்கிறது இது இப்படி இருக்க இவர் சினிமாவையும் தாண்டி சீரியல்களிலும் நடிக்க அதிக ஆர்வம் காட்டியவர்  நடிகை சௌந்தர்யா என்பது குறிப்பிடதக்கது. திருச்செல்வம்  இயக்கத்தில் உருவான கோலங்கள் சீரியல் நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் சன் டிவியில் மிக பாப்புலராக ஓடிக்கொண்டிருந்தது சொல்ல வேண்டும் என்றால் 1000 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிய செயல்களில் ஒன்று கோலங்கள்.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால்  1553 நாட்கள் வரை ஓடியது. இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் சௌந்தர்யா நடிகை நடிக்க இருந்தார் ஆனால் சில காரணங்களால் அவர் அப்பொழுது நடக்காமல் போகவே பின் நடிகை தேவயானி அந்த கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்.

வெள்ளித்திரை சின்னத்திரை என எதுவும் பார்க்காமல் கதை சிறப்பாக இருந்தால் போதும்   அதில் தனது திறமையை வெளிக்காட்ட  நடிகை சௌந்தர்யா இவர் கோலங்கள் சீரியலில்   நடித்திருந்தால் வேற லெவல் இருந்திருக்கும் எனவும் இல்லத்தரசிகள் தொடங்கி ரசிகர்கள் வரை கூறி வருகின்றனர்.