தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை லலிதா குமாரி. இவர் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தின் மூலம் தான் திரையுலகில் முதன் முதலாக அறிமுகமானார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து வீடு மனைவி மக்கள், புது புது அர்த்தங்கள், புலன் விசாரணை, உலகம் பிறந்தது எனக்காக, போன்றத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவ்வாறு தன்னுடைய வாழ்வில் இதுவரை 35 திரைப்படங்களுக்கும் மேலாக நடித்துள்ள லலிதாகுமாரி நடிகர் ஆனந்தனின் மகள் என்பது பலருக்கும் தெரியாத விஷயம் தான் அதுமட்டுமில்லாமல் நடிகை டிஸ்கோ சாந்தியின் தங்கை இவர்தான் என்பது குறிப்பிடதக்கது.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை 1994 ஆம் ஆண்டு நடிகர் பிரகாஷ்ராஜ் திருமணம் செய்து கொண்டார். இவர் தன்னுடைய திருமணத்திற்கு பிறகு பூஜா, மேக்னா ஆகிய இரண்டு மகள்களை பெற்றெடுத்த நமது நடிகை அதன் பின்னர் ஒரு மகனுக்கும் தாயானார். பின்னர் அவருடைய மகன் சித்து 2004 ஆம் ஆண்டு காலமாகிவிட்டார்.
இவ்வாறு தன்னுடைய மகனின் மறைவிற்குப் பிறகு ஆக பிரகாஷ்ராஜுக்கும் லலிதா குமாரிக்கும் இடையே ஏகப்பட்ட பஞ்சாயத்து ஏற்பட்டது இதன் விளைவாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட இவர்களுடைய திருமணம் விவாகரத்தில் முடிவடைந்துவிட்டது பின்னர் லலிதாகுமாரி சினிமாவை விட்டுவிட்டு தன்னுடைய குடும்பத்தை பார்க்க ஆரம்பித்துவிட்டார்.
இந்நிலையில் சமீபத்தில் கூட இவருடைய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் லலிதாகுமாரியா இது என அனைவரும் ஆச்சரியத்தில் உள்ளார்கள் பேட்டி ஒன்றில் இவரிடம் கேள்வி எழுப்பியபோது கவுண்டமணிக்கு தங்கையாக நடித்த போது நீங்கள் பெயின்ட் அடித்துக்கொண்டு ஒரு காட்சியில் நடித்து இருப்பீர்கள் அதை படிய அனுபவத்தை கூறுங்கள் என்று கேட்டுள்ளார்கள்.
அப்பொழுது இயக்குனர் என்னிடம் கருப்பு மேக்கப் போட்டுக்கொண்டு நடிக்க வேண்டும் என்று கூறினார்கள் அப்போது நான் கருப்பாக தான் இருந்தேன் இதற்கு மேலும் இன்னும் கருப்பாக நடிக்க சொன்னதன் காரணமாக நான் நடிக்க முடியாது என அழுதேன் ஏனெனில் நான் ரொம்ப அசிங்கமாக இருப்பேன் என பயந்தேன்.
அப்பொழுது இயக்குனர் நீ விஜயகுமாரி அம்மாவோட கருமைநிற கண்ணா என்ற பாடலை கேட்டு இருக்கிறாயா என்று கேட்டார் அப்பொழுது நான் கேட்டிருக்கிறேன் அந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று சொன்னேன் அப்பொழுது அந்தப் பாடலில் அவர்கள் எவ்வளவு அழகாக இருந்தார்கள் அதேபோல நானும் உன்னை அழகாக காண்பிக்கிறேன் என்று சொன்னார்கள்.
அதன் பின்னர் நானும் ஒப்புக்கொண்டு அந்த திரைப்படத்தில் நடிக்க முன்வந்தேன். இவ்வாறு திரைப்படம் வெளிவந்த அதன் பிறகு பலரும் நீங்கள்தானே அது என கேள்வி எழுப்ப ஆரம்பித்து விட்டார்கள். இவ்வாறு நான் நடிக்க மறுத்த அந்த காட்சியின் மூலம்தான் தற்போது நான் இன்றும் பிரபலமாக இருந்து வருகிறேன் என்றும் கூறியுள்ளார்.