தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் வெற்றிமாறன் இவர் தான் இயக்கும் திரைப்படத்தில் வித்தியாசமான கதை அம்சம் உள்ள கதையை கொடுப்பதில் சிறப்பு மிக்கவர். அந்தவகையில் இவர் இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த திரைப்படத்தில் பணியாற்றிய வெற்றிமாறன் மற்றும் தனுஷ் ஆகிய இருவருக்குமே இந்த திரைப்படத்தின் மூலமாக தேசிய விருது கிடைத்துள்ளது. பொதுவாக இயக்குனர் வெற்றிமாறன் எப்பொழுதும் தான் இயக்கும் திரைப்படங்கள் பொழுதுபோக்காக இருக்கக்கூடாது என்ற விஷயத்தில் தெளிவாக இருப்பார்.
அந்தவகையில் இவர் இயக்கும் திரைப்படங்கள் அனைத்துமே சமுதாயத்தில் ஏதேனும் ஒரு கருத்தை தெரிவிக்கும் வகையில் இருப்பது மட்டுமில்லாமல் நல்ல கதையம்சம் உள்ள திரைப்படமாகவும் இருக்கும். இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் தனுஷின் பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
இவ்வாறு இந்த திரைப்படத்தில் சென்றாயான் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் நடித்து இருந்தார்கள் அந்த வகையில் இந்த பொல்லாதவன் திரைப்படமானது தனுஷின் வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது மட்டுமல்லாமல் மிகப்பெரிய சூப்பர் ஹிட் திரைப்படம் மாகவும் அமைந்துவிட்டது.
அந்தவகையில் இந்த திரைப்படத்தில் சென்றாயன் பார்த்துப் பேசும் அந்த வசனம் ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலமாக பார்க்கப்பட்டது ஆனால் இந்த வசனத்தை அவர் பேசவில்லை இயக்குனர் வெற்றிமாறன் தான் இந்த வசனத்திற்கு குரல் கொடுத்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் நடிகர் வெற்றிமாறன் பல்வேறு நடிகர்களுக்கும் டப்பிங் குரல் கொடுத்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நிலையில் நமது இயக்குனர் தற்போது காமெடி நடிகர் சூரியை வைத்து விடுதலை என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.