தமிழ் சினிமா உலகில் பன்முகத்தன்மை கொண்டவராக இருப்பவர் உலகநாயகன் கமலஹாசன் இவர் ஆரம்பத்திலிருந்து இப்பொழுது வரையிலுமே நல்ல நல்ல படங்களை கொடுத்து வருகிறார் ஏன் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக 410 கொடிக்கு மேல் அள்ளி புதிய வசூல் சாதனை படைத்தது.
இந்த படத்தை தொடர்ந்து கமல் இந்தியன் 2 படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.. இந்த படத்தின் சூட்டிங் சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் பலமாக்கப்பட்டு வருகிறது இது தவிர உலகநாயகன் கமலஹாசன் சின்னத்திரையில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியையும் சீசன் சீசனாக தொகுத்து வழங்கி வருகிறார்.
இப்பொழுது பிக்பாஸ் 6 வது சீசனை வெற்றிகாரமாக தொகுத்து வழங்கி வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் உலகநாயகன் கமலஹாசன் படம் பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. 1992 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் பரதன் இயக்கத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம் தேவர் மகன்.
இந்த படத்தில் கமல், சிவாஜி, ரேவதி, வடிவேலு, நாசர் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்.. இந்த படத்தை பரதன் தமிழில் தேவர் மகன் எடுக்கும் பொழுது நாசரின் கதாபாத்திரத்திற்கு முதலில் கமிட்டானவர் சலீம் தான்.. சலீம் கவுஸ் தான் நடிக்கும் படங்களில் சொந்தக் குரலிலேயே பேசினார்.
அவருக்கு தமிழ் சரளமாக வராது ஆனால் தேவர் மகன் படம் வசனம் அதிகம் என்பதால் சலீம் விலகினார். அவர் அப்பொழுது அதிக வாய்ப்புகளை கொண்டதால் தேவர் மகன் படப்பிடிப்பிற்கு கால்ஷீட் பிரச்சனையும் இருந்தது பிறகு அவருக்கு பதில் கடைசியாக நடிகர் நாசர் இந்த படத்தில் கமிட் ஆகினார் என்பது குறிப்பிடத்தக்கது.